பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244. தேசியத் தலைவர் காமராஜர் தனது இறுதி மூச்சுப் போகும்வரை, தான் வளர்த்த காங்கிரஸ் கட்சிக்காகவே உழைத்து உயிர் விட்ட கொள்கைக் கோமான் தலைவர் காமராஜரைப் போன்று ஓமந்துார் ரெட்டியார், எந்தவிதக் கட்சி விரோத அக்கிரமங்களோடும் ஒத்துப்போகாத, தெரியாத ஒழுக்க சீலர் நேர்மையின் பிறப்பிடம். அதனால்தான் அவர் தமிழ்நாட்டுக் காந்தி என்று தமது கட்சிக்காரர்களாலும் . பொதுமக்களாலும் புகழப்பட்டார். 1946-ஆம் ஆண்டில், சட்டப் பேரவைக் காங்கிரஸ் கட்சித் தேர்தலில் ஓமந்துர் இராமசாமி ரெட்டியாருக்கும் பழம் பெரும் ஆந்திர மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தேசபக்தரும் - ஆந்திரகேசரி என்று தெலுங்கு மாநில மக்களால் போற்றப்பட்டவருமான பிரகாசம் அவர்களுக்கும் மிகக் கடுமையான தேர்தல் போட்டி நடந்தது. அப்போது, ஓமந்துார் இராமசாமி ரெட்டியார் தமிழக சட்ட சபையின் மேலவை உறுப்பினராக இருந்தார். ரெட்டியாரைத் தலைவர் காமராஜ் முதல்வர் தேர்தலில் நிற்க வைத்தார் ஆதரித்தார் பிரகாசம் அவர்களை இராஜாஜி நிற்க வைத்தார் - ஆதரித்தார் முடிவு? பிரகாசம் அவர்கள் 73 வாக்குகளை மட்டுமே காங்கிரஸ் கட்சியிலே பெற்றுத் தோற்றுப் போனார். ஒமந்துர் இராமசாமி அவர்களுக்குத் தலைவர் காமராஜ் ஆதரவு தந்ததால், அவர் 166 காங்கிரஸ் வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். 1947-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21-ஆம் நாள், சென்னை மாநிலத்தின் இரண்டாவது முதல் மந்திரியாக ரெட்டியார் தேர்வானார்: ரெட்டியார் அவர்களுக்கு ஆங்கில மொழியறிவு குறைவு! எவரேனும் ஆங்கிலத்தில் பேசினால் புரிந்து கொள்ளும் சக்தி பெற்றவர் எந்த விவரங்கள் ஆங்கிலத்தில் வந்தாலும் படித்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்: ஆனால், அவர் தமிழிலோ - தெலுங் கிலோ சரளமாகப் பேசுவதைப் போன்று, அவ்வளவு திறம்பட ஆங்கிலத்திலே பேச இயலாதவர் அப்போது சென்னை மாநில ஆளுநராக இருந்தவர் மாண்புமிகு சர். ஆர்ச் பால்ட்னை என்ற ஆங்கிலேயராவார்.