பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 245 அவரைச்சந்தித்துப் பேசரெட்டியார் செல்லும் போதெல்லாம், மொழிச் சிக்கல் உருவாகாமல் இருக்க திரு. சி.சுப்பிரமணியம் அவர்களை உடன் அழைத்துச் செல்வார். முதல்வர் ஒமந்துராரின் சட்டமன்றத்துறை தலைமைச் செயலாளராக சி.சுப்பிரமணியத்தை நியமிக்கலாம் என்று ரெட்டியாருக்கு அவருடைய நண்பர்கள் பரிந்துரைத்தார்கள். தில்லி அரசியல் நிர்ணய அவையிலே இருக்கும் உறுப்பினர் பதவியை இழக்கவும், அதே நேரத்தில் தனது வழக்குரைஞர் தொழிலைத் துறக்கவும் சி.சுப்பிரமணியம் விரும்பாததால், ரெட்டியார்கருத்துக்கு அவர்இணங்க மறுத்துவிட்டார். அப்படியானால், தங்களுக்கு முழு நம்பிக்கையுள்ள ஒருவரை எனது தனிச்செயலாளர் பதவிக்குப் பரிந்துரைக்குமாறு ரெட்டியார் சுப்பிரமணியத்தைக் கேட்டுக் கொண்டார். கல்லூரியில் தன்னுடன் ஒன்றாகப் படித்தவரும், அப்போது நீதித்துறையில்துணைநிலை அதிகாரியாக, மாவட்டமுன்சீப் என்ற பதவியிலே பணியாற்றிக் கொண்டிருந்தவரும், எதிர்காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்ற வருபவருமான ஏ. அழகர்சாமி என்பவரை சி.சுப்பிரமணியம் ரெட்டியாருக்கு சிபாரிசு செய்தார். ரெட்டியார், சுப்பிரமணியம் கருத்தையறிந்து தனது தனிச் செயலாளர் பதவிக்கு திரு அழகர்சாமியை நியமித்துக் கொண்டார். இராஜாஜி அவர்கள் ஒருநாள் அழகர்சாமியைச் சந்தித்தபோது, 'நீங்கள் என்ன ரெட்டியார் வகுப்பா?’ என்று கேட்டார் நான் ரெட்டியார் இல்லை, கம்ம நாயுடு வகுப்பைச் சேர்ந்தவன்” என்று அவர் இராஜாஜிக்குப் பதில் கூறினார்: "நீங்கள் தென்னார்க்காடு மாவட்டத்தைச்சார்ந்தவரா?" என்று, மீண்டும் கேட்டார் இராஜாஜி! 'இல்லை, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன்' என்றார் அழகர்சாமி! 'அப்படியானால், ஓமந்துர் இராமசாமி ரெட்டியாரை உங்களுக்குப் பல ஆண்டுகளாகத் தெரியுமா?" 'இல்லை' என்றார் அழகர்சாமி! 'ரெட்டியார் ஏன் உங்களைத் தன்னுடைய தனிச் செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தார்?' என்று கேட்டார் இராஜாஜி!