பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தேசியத் தலைவர் காமராஜர் 'இந்த கேள்வியை நீங்கள் சி.சுப்பிரமணியத்திடம் கேட்க வேண்டும்' என்றார்அழகர்சாமி. 'சி. சுப்பிரமணியம்தான் உங்களுக்கு சிபாரிசு செய்தாரா? அப்போது அவரது நியமனம் சரியாகத்தான் இருக்கும்' என்று கூறிவிட்டுச்சென்றார் இராஜாஜி. அதைக் கண்ட அழகர் சாமி, இராஜாஜியின் அரசியலாய்வு நுட்பத்தை வியந்து திகைத்தார்: ஓமந்தும் ரெட்டியார் பணிகள் ஒமந்தூரார்ஆட்சியில் விவசாயத்துறையும் சிறப்புற்றது; உழவர் பெருமக்களும் மிகச்சிறப்புப் பெற்றார்கள். காரணம், அவரே ஒரு விவசாயி கிராம மணியக்காரர்.

  • எந்தக் கோப்பின்அலுவலானாலும் சரி, நன்றாகவிசாரி, கணக்கு எடு, மீண்டும் பரிசீலனை செய்து பார்” என்றே நுணுக்கமாக அதில் எழுதுவார்: * தமிழகம் முழுவதும் அவர் தம் ஆட்சியில், 11,701 நியாய விலைக் கடைகளைத் திறந்து மக்களுக்குரிய உணவுப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தார்: * 10 ஆயிரம் பள்ளிகளில், காய்கறித் தோட்டங்கள் தோன்றிட

அவர் உத்தரவிட்டார். * தொழிற்சாலைகளை அமைத்திட, நன்செய்ப் பயிர் விளையும் நிலங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்: * சோமசைலம் என்ற திட்டம் ஒன்றை உருவாக்கி, அதன் வாயிலாகக் கிருஷ்ணா நதி - பெண்ணாறு இரண்டு நதிநீர்களையும் இணைத்து, சென்னைக்கு குடிநீர் வழங்க முதன்முதலில் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தவரே திரு. ஓமந்துர் இராமசாமி ரெட்டியார்தான்! * அவருக்குப்பிறகுதான், மக்கள் திலகம் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராக வந்தபின்பு, அதே நேரத்தில் ஆந்திர மாநில முதல்வராக திரு. என்.டி. இராமராவ் முதல்வரானதும் அவருடன்கலந்துரையாடி, சென்னைக்கு கிருஷ்ணாநதி குடிநீர் வழங்கும் திட்ட ஒப்பந்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். * தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், அதன் சிறப்புக்களைத் தரணிக்கு எடுத்து விளக்குவதற்காகவும், தமிழ்க் களஞ்சியம்