பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 11 'அருள் பொழிகின்ற உதடுகளோடு, அகிம் சா அறப் பண்புகளோடு, காந்தியடிகள் அரசியலை வளர்த்தார்! சத்தியத்திற்காகக்கூடிய சாதுக்களைப்போல, மக்கள்.அவர் பின்னே சென்று கட்சிப் பணிகளிலே சரிகமபதநிச பாடினார்கள் நம்மால் முடியுமா அவர் ஆற்றலோடு நடந்திட: 'மணமகன் பின்னே நடக்கும் மணமாகா கன்னிகள் போல, மக்களின் ஏக்கநாடிகளைப் பிடித்துப் பார்த்து மகிழ்வுப் பணிகளை ஆற்றும் தகுதி நமக்கு உண்டா? மணமகள் பின்னே போகும் சுமங்கலிகளைப் போல, அனுபவ நெறிகளால் கட்சிக்காரர்களை மகிழ்விப்பில் மிதக்க வைக்க இயலுமா? போவதும் - வருவதும் போன்ற கடலலைகளாகப் பணியாற்றிய பிற தலைவர்களிலே நானும் ஒருவனாவேனா? - "புகழ் பாடும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வரலாறு பெற்ற காவிரியாறு, பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, வளம் பெருகி, வளம்பெருக்கி, பின்னர் வளம் அருகி; வலமிடமாக மாறிமாறி காச நோயாளனைப்போல எலும்பும் தோலுமாகக் காட்சி தரும் பூம்புகார் நீர்க் காலாக மாற்றப்படுவேனா? 'இறையடியார்களான திருத்தொண்டர்களைப் பாடிப்பராவிய சேக்கிழாரின் செயற்கரிய பணியை, காந்தியடிகளுக்காக ஆற்றப் புறப்பட்ட சத்திய சோதனையாக எனையும் கருதி, காங்கிரஸ் இயக்கம் தன் பின் வரும் பக்தனாக வாழவிடுமா? என்னையும் பின்பற்றுமா?" 'கைப்பொருளை இழந்த கஞ்சன் ஒருவன், அதை எப்படியெல்லாம் தேட சம்பாதிக்க. பாடுபட்ட அனுபவ உணர்வுகளை எண்ணித் தவிப்பானோ; அந்த வேதனைகளோடு அல்லற்பட்டார் தலைவர் காமராஜ். 'இருப்பினும், தமிழ் நாட்டு மக்கள் தம்மைக் காங்கிரஸ் கட்சியின் தலைவனாக இயங்க வைத்ததையும், அதனால் ஏற்பட்ட அனுபவப் பெருமைகளையும் இனிக்க இனிக்க எண்ணி மகிழ்ந்தார்: 'தமிழக அரசியலின் கோபுர உச்சியிலே ஒன்பதரை ஆண்டுகள் கலசமாகக் காட்சியளித்தோம்! நமது அறிவுக்கும் சக்திக்கும் ஏற்ற தொண்டுகளைப் புரிந்தோம்! இவை போதாதே - அவர்களுக்குக் கைமாறாக! 'இப்போது 68-வது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவனாக, நம்மை இந்திய மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். தமிழ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய பணிகளே போதா என்றபோது,