பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 24.7 என்ற நூல் தொகுதிகளை வெளியிடும் பேறு, ஒமந்துாரார் ஆட்சிக்குத்தான் கிடைத்தது. * தமிழக அரசுச் சார்பாக, அரசவைக் கவிஞர் என்றதோர் பதவியைப் பண்டை மன்னர்களைப் போல உருவாக்கி, தமிழுக்குப் பெருமை வழங்கும் அந்தப் பதவியிலே கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை என்ற தேசியக் கவிஞரை அமரவைத்து, தேசபக்த தியாக சீலத்திற்கு சிறப்புத் தேடித்தந்து பாராட்டியவர் திரு. ஓ.பி. இராமசாமி ரெட்டியார்: * தமிழ் மொழியில் சிறந்த நூற்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தை உருவாக்கியவர் ஒ.பி. ஆர். அவர்கள்! * தேசிய கவிஞர் சி. சுப்பிரமணிய பாரதியார் எழுதிய நூற்களை அரசு சார்பாகப் பதிப்பிக்க எல்லா ஏற்பாடுகளை மட்டும் செய்தவரல்ல அவர் அந்த நூற்களை எல்லாம் பொது மக்களது சொத்தாக மாற்றிய பெருமை ரெட்டியாருக்குண்டு! * தமிழகத் திருக்கோயில்களில் தமிழ் மணம் கமழும் செயல்கள் அனைத்தையும் செய்திட, அறங்காவலர்களுக்கும் - இந்து அறநிலையத் திருக்கோவில் துறைக்கும் தக்க ஆணை பிறப்பித்தவர் அவர்! * பிரதமர் ரெட்டியார் சைவ சமயத்தின் பால் தணியாத பற்றுக்கொண்டவர் சைவம் வளரத் தனது உழைப்பையும் - சிந்தனையையும் - வழங்கியவர்:

  • அதனால், தமிழ்நாட்டு அரசுக்கு இலச்சினை ஒன்றை உருவாக்கிய நேரத்தில், தமிழகத்தின் தெய்விகப் பண்பாட்டு ஒழுக்கங்களை ஒம்பும் திருக்கோவில் உருவத்தைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்து அதை நிலைநாட்டியவர் திரு. ரெட்டியார் அவர்கள்!
  • ஒமந்துாராரின் அரசுச் சின்னத்திற்கு அனுமதி தராமல் நிறுத்தி வைத்து, 'பாரத அரசு சமயச் சார்பற்ற - மதச் சார்பற்ற அரசு| எனவே, இந்தக் கோபுரத்தை அரசுச் சின்னமாக அமைக்க வேண்டாம். அதைக் கை விடுக’ என்று இந்தியப் பிரதமர்திரு நேரு அவர்கள் தமிழக முதல்வரான திரு ஓமந்துாரார் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
  • பிரதமர் ரெட்டியார், நேரு அவர்களுக்குப் பதில் எழுதும்போது, மகாத்மா காந்தியடிகளின் நண்பரான திரு. சி. எஃப். ஆன்ட்ரூஸ் மதகுருவின் ஆதாரத்துடன் தக்க விளக்கத்தோடு குறிப்பிட்டார்: