பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.8 தேசியத் தலைவர் காமராஜர்

  • திருப்பத்தூர் நகரிலே ஆன்ட்ரூஸ் கட்டிய கோபுர தேவாலயம்

உள்ளதையும் ரெட்டியார் சுட்டிக் காட்டினார்: * தமிழகத்தின்தொன்மையான இறைவடிவச்சின்னம் கோபுரம் சின்னம் அந்தச் சின்னம் தான் மெட்ராஸ் ஸ்டேட்டின் அரசு சின்னம் என்பதை வலியுறுத்தியும் வற்புறுத்தியும் எழுதிப் போராடி, கோபுரசின்னத்தை நில நாட்டியவர் ரெட்டியார். * பிரதமர் ஒமந்துரார் அத்துடன் நிற்கவில்லை. அதைவிட ஒருபடி மேலே சென்று, கோபுரம் சின்னத்தின் மேலே 'சத்தியமேவ ஜயதே' என்ற உபநிடத வாசகத்தையும் பொறித்துக் காட்டினார்: இந்த நினைத்தற்கரிய சிந்தனை இந்திய நாட்டிலேயே, தமிழ்நாட்டுப் பிரதமரான திரு ரெட்டியார் அவர்களுக்குத்தான் தோன்றியதே தவிர, பிற எந்த அமைச்சர் மூளையிலும், மின்னலிடவே இல்லை! ஒமந்துர் இராமசாமி அவர்களுக்கு மட்டும் இந்தப் பண்பாட்டுணர்வு எவ்வாறு முகிழ்த்தது? அதற்குரிய அடிப்படைக் காரணம் ஏதாவது உண்டா? ‘வேதாந்த நெறியை மேலை நாட்டிலே பரப்பி பெரும் வெற்றிப் பரணியுடன் வருகை தந்த சுவாமி விவேகானந்தரது புனிதப் பாதத்துள்ளி - இந்திய மண்ணில், முதலில் பட்ட இடம் என்பதன் நினைவாக, மன்னர் சேதுபதியால் நிர்மாணிக்கப்பட்டது இந்த நினைவுச்சின்னம்.” - என்ற வாசகங்கள் பதித்த வெள்ளைப் பளிங்குக் கல் ஒன்று இராமநாதபுரம் சேதுபதி மன்னரது துறைமுகமான பாம்பன் என்ற இடத்தில் 20.01.1897 அன்று நிறுவப்பட்டது. 'ஆன்மிகத்தத்துவங்களின்திருஉருவமாக நடமாடிய நரேந்திரர் சுவாமிகள் தமிழகம் மண்ணிலே முதலடியை, முதன் முதலாக விவேகானந்தராக அடியெடுத்து வைத்தபோது அந்த நினைவுக்கல் நாட்டப்பட்டது. 'சுவாமி விவேகானந்தருடைய வருகை, பாஸ்கர சேதுபதி மன்னருரை எல்லையில்லாத இன்பக் கடலில் திளைக்கச் செய்தது என்பதை இந்த நினைவுச் சின்ன வாசகம் நினைவூட்டுவதாக இன்றும் உள்ளது. சேதுபதி மன்னர் தமது பரிவாரங்களுடனும், பக்த கோடிகளுடனும் திரண்டு வந்து மிகப்பெரிய வரவேற்பு விழாவை அவருக்கு நடத்தினார்.