பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 249 "வாய்மையே வெல்லும் ' என்ற பொருளிலே வரும் “சத்தியமேவ ஜயதே' என்ற உபநிடத வாசக வாக்கினை மங்கலச் சொல்லாக அன்று தேர்வு செய்தார்மன்னர் சேதுபதி. சேதுபதி மன்னர் கொண்டாடிய இந்த வரவேற்பு விழா நிகழ்ச்சிக்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து, 1947-ஆகஸ்டு 15 ஆம் நாளன்றுதான்நமது இந்திய மண்ணுக்குரிய விடுதலை கிடைத்தது!” 'இந்தியக் குடியரசும், தமிழக அரசும் தங்களது அரசுச் சின்னங்களில், பாஸ்கர சேதுபதி மன்னர் தேர்ந்தெடுத்த அதே உபநிடத வாசகத்தையே மங்கலச் சொற்களாகத் தேர்வு செய்தன என்றால், தமிழ் மண்ணின் ஆன்மிக தெய்விக - பண்பாட்டுச் சிந்தனையின் ஊற்று மன்னர் பாஸ்கரருக்கு முன்பே தோன்றியதின் சிந்தனையையும் சீலத்தையும் என்ன பெயரிட்டுப் பெருமைப் படுவதோ...!" 'செம்மையான சிந்தனையையும் செயலையும் எழுச்சி கொள்ளச் செய்ய, வாய்மையின் வலிமையை விட வேறு என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிந்த கல்விக் கடல் அல்லவா திரு பாஸ்கர மன்னர்?’’ மன்னர் பாஸ்கரருக்கு முகிழ்த்த அதே ஆன்மீகப் பண்பு, முதல்வர் ஒமந்துர் இராமசாமி ரெட்டியாருக்கும் மின்னலிட்டதால் தான், “சத்தியமேவ ஜயதே என்ற அதே உபநிடத வாக்கைத் தமிழக அரசுச்சின்னமான கோபுரத்தினைச் சுற்றிப் பொறித்தார். பிரதமர்ஓமந்துாரார், மன்னர்பாஸ்கரரின்சிந்தனையைவிட சற்று மேலே சென்று, தமிழர்களின் உயிர் - உடல் உடைமைபோல் எண்ணப்பட்டு வழிபட்டு வரும் தொன்மையான ஆன்மிகச் சின்னமான கோபுரத்தையே அரசுச் சின்னமாக நிலைநிறுத்தினார் இந்தியப் பிரதமர் நேருவிடம் போராடி! கோபுரம், இவ்வாறு ஒரு தமிழ் வரலாற்றைப் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமை தரும் நிகழ்ச்சியல்லவா? 1967ஆம் ஆண்டு, மக்களால் காங்கிரஸ் ஆட்சி மாற்றப்பட்டு, அறிஞர் அண்ணா அவர்கள் நிர்வாகத்தின் கீழே வந்து, தமிழ்நாட்டு மக்களாட்சி மாண்புபெற்றது! அறிஞர் அண்ணாஅவர்கள், முதலமைச்சர்ஆனதும், மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை மாற்றித்தமிழ்நாடு என்று பெயர்சூட்டினார்.