பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 தேசியத் தலைவர் காமராஜர் இதற்கும் அடிப்படைக் காரணம், சங்கரலிங்கனார் என்ற ஒரு காங்கிரஸ் தியாகி. தமிழ்நாடு என்ற பெயரைத் தமிழ் நாட்டுக்குச் சூட்ட வேண்டும் என்று அறுபத்தைந்து நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டார். அந்தத் தமிழன் தியாகத்தை மதித்த அறிஞர் அண்ணா அவர்கள் - செத்தவர் காங்கிரஸ்காரர்தானே என்று தட்டிக் கழிக்காமல், 1967 -ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்பே, தமது தேர்தல் அறிக்கையில், "நான் ஆட்சி அமைத்தால் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவேன்' என்று அறிவித்தார்: அதற்கேற்ப, மக்கள் அவரிடம் ஆட்சியை அளித்ததும், சங்கரலிங்கனார் கனவை நனவாக்கிட, தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டி தமிழ் மக்களின் நீண்ட நாள் அவாவை நிறைவேற்றிக் கொடுத்தார்: அடுத்தபடியாக, பாஸ்கர சேதுபதி மன்னர், முதல்வர் ஒமந்துர் இராமசாமிரெட்டியார், கனவுகளையும் அண்ணா அவர்கள் நனவாக்கி நாட்டுக்குக் காட்டினார். 'சத்தியமேவ ஜயதே' என்று சேதுபதி மன்னரின் உபநிடத வாசகத்தை, முதல்வர் ஒ.பி. ஆர். அவர்களின் உபநிடத வாக்கை, அப்படியே தமிழாக்கி 'வாய்மையே வெல்லும் ' என்ற சொற்றொடர்களால் கோபுரசின்னத்தைச்சுற்றிப் பொறித்து அறிஞர் அண்ணா பெருமைப்படுத்தினார். வடமொழியிலே கோபுரத்தைச் சுற்றி அச்சடிக்கப்பட்டிருந்த 'சத்தியமேவஜயதே' என்ற வாசகத்தை, 'வாய்மையே வெல்லும்' என்று தமிழில் மட்டுமே அச்சடிக்க ஆணையிட்டவர் அண்ணா!

  • ஓமந்துார்.இராமசாமி ரெட்டியார்.அவர்கள்முதல்வராக ஆட்சி செய்தபோது, ஊழல் - இலஞ்சம் என்ற எண்ணங்களுக்கே இடம், கொடாமல், எவருக்கும் எழாமல் நாட்டை நடத்திக்காட்டினார்:
  • தலைவர் காமராஜ் அவர்களாலும் - எதிர்க்கட்சியிலே இருந்த அண்ணா அவர்களாலும், தென்னகத்துக் காந்தி, ஒழுக்க சீலர், நேர்மையாளர்' என்று பாராட்டப்பட்ட சீரிய மனிதராக ஓமந்துாரார்தமது ஆட்சியிலே திகழ்ந்தார்:
  • ஆட்சியிலே பணியாற்றிக் கொண்டிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேல் ஒருமுறை குற்றச் சாட்டுகள் குவிந்தபோது ரெட்டியார் அவர்களை அழைத்துத் தீர விசாரித்து, உண்மையை உணர்ந்தபோது, அவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்: