பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 251

  • டில்லியிலே பிரதமராக இருந்த பண்டித நேரு அவர்களுக்கு இந்த விவரம் தெரிந்தபோது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்விவகாரங்களில் 'அவசரம் காட்ட வேண்டாம்' என்று அவர் கூறினார். அதற்கு, பிரதமர்ரெட்டியார்'இது மாநில நிர்வாகப் பிரச்னை' என்றுதுணிந்து கூறிவிட்டார்.

காங்கிரஸ் கட்சியிலே இருந்தவர்கள் - முக்கியமானவர்கள் தலைவர்கள்எல்லாம்ஆட்சிநிர்வாகத்தில்குறுக்கீடுகள் செய்தபோது, 'காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்திடஆட்சி உதவ வேண்டும் என்ற கருத்தை ஏற்க மாட்டேன்' என்று பகிரங்கமாகவே, பாரபட்சமின்றி, வெட்டொன்றுதுண்டிரண்டாகவே கண்டித்தார் ஓமந்துரார் இதனால், காங்கிரஸ் கட்சிக்கும் அதன்தலைவர்கள் சிலருக்கும் ரெட்டியார் மீது ஒருவித எரிச்சலுணர்வு ஏற்பட்டது - ஆத்திரம் ஆர்ப்பாட்டமாகியது. ஆ. சட்டசபை உறுப்பினர்கள், அரசு நிர்வாகத்தில் தலையிட்டு எதற்காவது சட்டத்திற்குமுரணாகப் பரிந்துரைகளைச் செய்தால், அவற்றைப்புறக்கணித்துவிடுங்கள்! மக்களிடம் உள்ள குறைகளைக் கேட்டு அவற்றில் நியாயமிருந்தால் உடனே நிறைவேற்றுங்கள்.” - என்று, அரசுத் துறை அதிகாரிகளுக்கு ஒமந்துரார் கட்டளையிட்டார்! 'இந்த ஆணை, காங்கிரஸ் கட்சியிலுள்ளவர்களின் தன்மானத்தைப் பாதித்தது. சட்டசபை உறுப்பினர்களின் கடமைகளைப் பாதிக்கின்றது' என்று கூறி, காங்கிரஸ் கட்சி திரு. ரெட்டியார் அவர்களைப் பணிய வைத்திட முயன்றது! அதற்குப் பதிலடியாக, "நான் இப்படித்தான் எனது ஆட்சியின் நிர்வாகத்தில் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னை முதல்வர் பதவியேற்கச் சொன்னபோது, எனது நிர்வாகத்தில் எவருடைய தலையீடும் இருக்கக்கூடாது என்று கூறித்தான் முதல்வர் பதவியை ஏற்றேன்.” “எனது சீர்திருத்தம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், வேறு ஒரு தலைவரைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன்.அல்லவா?" என்று கேட்டார்: அதனால், 1947-முதல் 1949-ஆம் ஆண்டு வரை மட்டுமே, அதாவது இரண்டாண்டு காலம் வரை - அவர், சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பணியாற்றிடும் நெருக்கடி நிலை உருவாயிற்று.