பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 தேசியத் தலைவர் காமராஜர் தலைவர்காமராஜ் அவர்களும், ஓமந்துராரின் இந்த ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், 6.4.1949-ஆம் ஆண்டு வரை ரெட்டியார் முதல்வர் பதவியிலே பணியாற்றிவிட்டு, அதற்குப் பின்பு அவரே அப் பதவியை விட்டு விலகிவிட்டார்: இதற்குப் பிறகு, லால் பகதூர் சாஸ்திரி அவர்கள், இந்தியப் பிரதமராக வந்தபோது, ஓமந்துர் இராமசாமி ரெட்டியாருக்குக் கவர்னர் பதவியை வழங்கிட முன்வந்தார். சாஸ்திரி அவர்கள் அப்போது, மத்திய நிதியமைச்சராகப் பணியாற்றிய டி.டி. கிருஷ்ணமாசாரியாரிடம் கூறி, தூது அனுப்பி வைத்தார் ரெட்டியார் அவர்களிடம். கடிதமும் எழுதினார் அவர், ரெட்டியார் அவர்களுக்கு. ஆனால், சந்தர்ப்பவாத பதவிகளை ஏற்றிட மனமற்ற ஒமந்துரார் எளிமையின் பிறப்பிடமாக வாழ்ந்து - நெருப்பைப் போலப் பதவியிலே பணியாற்றி, ஊழலை நெருங்கவிடாமல் விரட்டி, சத்திய வாழ்வுப் பதவியாளராகத் திகழ்ந்த ரெட்டியார், கவர்னர் பதவியைத் தமக்கு வேண்டாம் என்று ஏற்க மறுத்து விட்டார்! கண்டதுண்டா வரலாறு இத்தகைய ஒரு கண்ணியவானை? சிதம்பரத்திலே உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் பட்டமளிப்புவிழாவில் உரை நிகழ்த்த முதல்வராக இருந்தபோது திரு. ரெட்டியார் ஒப்புக் கொண்டார்: அந்தப் பல்கலைக்கழகம் அவருக்கும் டாக்டர் பட்டமளிக்க முன்வந்தது. அதற்கு அவர், “பட்டம் பெறுபவர்களுக்காக உரையாற்ற வந்தவனே, தனக்கென ஒரு பட்டம் பெறலாமா? ஊரிலே சிரிப்பார்கள்’ என்று பதில் கூறி, தனக்கு வழங்கவிருந்த டாக்டர் பட்டத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இப்படி ஒரு மாநில முதல்வரை வரலாறு கண்டதுண்டா? காங்கிரஸ் கட்சிக்கு எவ்விதக் களங்கத்தையும் உருவாக்காமல், காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்புக்கும் தனது ஏணி போன்ற பதவி உயர்வுக்கும் இடந்தராமல், மகாத்மா காந்தியடிகளின் இலட்சியத்திற்கும் ஊறு உருவாக்காமல், ஓமந்துர் இராமசாமி ரெட்டியார் முதல்வர் பதவியிலிருந்து விலகி, அவர் மரணமடைந்த 1970-ஆம் ஆண்டுவரை அரசியல் துறவியாகவே வாழ்ந்து வந்தார்! AAAAAAAS AAAS SAAAAAS AAAAAS AAAASS ళ్ల గ్గ ఫ్లో : :