பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய விடுதலைச் சாசனம்! காந்தியடிகள் கண்டனம்! இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்பு, 1945-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. போர்க்காலப் பிரதமராகப் பணியாற்றிய வின்ஸ்டன் சர்ச்சிலின் கன்சர்வேடிவ் கட்சி தேர்தலில் தோற்றது. தொழிற் கட்சி பிரிட்டனில் வெற்றி பெற்றது. பிரதமரானார் அட்லி. அதனால், இந்தியா இனி விடுதலை பெற்றுவிடும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன: 'எந்த நாட்டையும் இனிமேல் அடிமை ஆதிக்கத்தில் வைத்திருக்க முடியாது’ என்ற மாவீரன் இட்லரின் மாண்புமிகு கருத்தை அகில உலகமும் உணர்ந்தது. குறிப்பாக, பிரிட்டனும் அந்நிலையை முழுமையாகப் புரிந்து கொண்டது. பிரிட்டனும், புவன முழுவதும், அன்று உணர்ந்து கொண்ட அதே உணர்வைத்தான், உலகை உலுக்கிப் போர்க்களம் கண்ட இட்லரும் அன்றே எடுத்துரைத்தான் என்று, செர்மானிய நாடாளுமன்றத்தில் ரிச் ஸ்டேக் என்பவர் அப்போது வாதாடிக் கொண்டிருந்த காலம்! "The main knot of the Imperial chain, that binds arround the globe is at London." "I will smash the knot to pieces and release the world from colonialism putting an end of imperialism." "May god bless me with success; and forgive me for the sin: I am going to commit to-wards this great cause." This is my Mission Adolph Hitler 'மேதினியைச் சுற்றி வளைத்துக் கட்டிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியச் சங்கிலியில், மிக முக்கியமான முடிச்சு, இலண்டன் மாநகரிலே இருக்கின்றது."