பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 தேசியத் தலைவர் காமராஜர் 'அந்த முடிச்சை அடித்து நொறுக்கி உடைத்துத் தள்ளி, அவனியைக் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முடிவு கட்டுவேன். இது எனது இலட்சியம்.” "இந்த இலட்சியம் நிறைவேற என்னைக் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும். இந்த பெரும் இலட்சியத்தை நிறைவேற்றிடும்போது உருவாகும் பாவங்களுக்கும் இறைவன் என்னை மன்னிப்பாராக! -என்று உலகச்செவிகளுக்கு மாவீரன் இட்லர் அன்று உணர்த்திய அந்த விடுதலைப் பண் ஒலியை, செர்மன் நாடாளுமன்றம் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அத்தகைய ஒர் அடிமை ஆதிக்கச் சேற்றிலே அகப்பட்டுத் தத்தளித்து கோர உருவமாக உழன்று கொண்டிருக்கும் இந்தியாவிற்கும் சுதந்திரம் கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கை ரேகைகள் உலக அரங்கின் அரசியல் சூழல்களிலே அரும்பின. அதே நேரத்தில், இந்திய வைஸ்ராயாக இருந்தவர் வேவல் பிரபு. இந்தியத் தலைவர்கள் எல்லாம், அப்போது அரசியல்விடுதலை பற்றிய பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார்கள். மிக முக்கியமான தலைவர்கள் எல்லாம் தீவிரமாகச் செயல்பட்டார்கள். இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையும் - ஜனாப் ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்து, இடைக்கால ஆட்சியை அமைக்கலாம் என்ற ஒரு கருத்து எழுந்தது. ஆனால், முஸ்லிம் லீக் கட்சி, அந்தத் கூட்டணி ஆட்சியில் சேர்ந்திட மறுத்து விட்டது. அதனால், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியிடமே ஆட்சியை ஒப்படைத்து விடலாம் என்று வைசிராய் வேவல்பிரபு நினைத்தார். ஜனாப் மெளலானா அபுல் கலாம் ஆசாத் அப்போது அகில இந்தியக்காங்கிரஸ் கட்சியின்தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். இடைக்கால அரசை அமைத்திட பண்டித ஜவஹர்லால் நேருவை, 1946ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ஆம் நாள் வருமாறு அவர் அழைத்திருந்தார் அதைக் கண்ட ஜனாப் ஜின்னா, அக்டோபர் 15-ஆம் நாள் இடைக்கால ஆட்சியிலே தாமும் சேர்வதற்குச் சம்மதித்தார்: பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை இந்தியாவிலே இருந்து கூறுபோட இதை ஒரு வாய்ப்பாகக் கருதியே, அவர் இடைக்கால ஆட்சியிலே பங்கு பெற எண்ணினார்.