பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 255 இந்தியாவில் கூட்டணி அமைச்சரவையை ஏற்படுத்துவதே இடைக்கால அரசின் அடிப்படைக் கொள்கை. ஆனால், முஸ்லிம் லீக் கட்சிக் கூட்டுப் பொறுப்பு ஆட்சியை இந்திய தேசியக் காங்கிரஸ் ஏற்க மறுத்தது. ஜனாப் ஜின்னாவின் கருத்தை அறிந்த பண்டித ஜவஹர்லால் நேரு, 'இந்திய தேசிய மகா சபை இனிமேல் பொறுமையை ஏற்காது; தொடர்ந்து அது பெரிய அளவில் போராட்டம் நடத்தும்’ என்று அறிவித்தார். இந்திய அரசியல் நிர்ணய சபை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால், இந்திய வைசிராய் வேவல்பிரபு, பண்டித நேரு, ஜனாப் ஜின்னா, சீக்கிய சமுதாயப் பிரதிநிதி பலதேவ சிங் ஆகிய அனைவரையும் இங்கிலாந்துக்குப் பேச்சு வார்த்தை நடத்த வருமாறு பிரதமர் அட்லி அழைத்தார்: ஜனாப் ஜின்னாவின் பாகிஸ்தான் பிரிவினை வாதப் பேச்சுக்களினால், இலண்டனில் நடைபெற்ற மேற்கண்டவர்களின் கலந்துரையாடல் வெற்றியை உருவாக்கவில்லை. அதனால், பண்டித நேரு இலண்டனிலிருந்து திரும்பி விட்டார். தில்லியிலே உள்ள நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் அரசியல் நிர்ணய சபை கூடியது. சென்னை மாகாணத்திலே இருந்து தலைவர் காமராஜ், என். கோபாலசாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமிஐயர், டாக்டர் எஸ். இராதா கிருஷ்ணன், டி.டி. கிருஷ்ணமாசாரியார், சி. சுப்பிரமணியம்ஆகியோர் அரசியல் நிர்ணய சபை உறுப்பினரானார்கள். ஆசாரிய கிருபளானி, திருமதி. சரோஜினி நாயுடு, சர்தார் வல்லபாய் படேல், பண்டித நேரு ஆகியோர் அனைவரும் வருகை தந்திருந்து, அந்த மத்திய சபை நிகழ்ச்சியிலே கலந்து கொண்டார்கள். சச்சிதானந்த சின்ஹா அரசியல் நிர்ணய சபையின் மூத்த தலைவராக இருந்ததால், அவர் அந்த அவைக்குத் தலைமை வகித்தார். "நாம் அனைவரும் தொலைநோக்குடன் செயல் பட வேண்டும். இல்லாவிட்டால் அழிந்து விடுவோம்.” என்று, சின்ஹா அவையை எச்சரித்தார். பின்னர், உறுப்பினர் பதவிப் பிரமாணம் களும் நடந்தன. பதவிப் பொறுப்புகளை எடுத்துக் கொண்ட பின்பு, இங்கிலாந்திலே பிரதமராக இருக்கும் அட்லி பிரபு அவர்களுக்கு,