பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 தேசியத் தலைவர் காமராஜர் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு ஒரு கடிதம் எழுதினார். அது, இது! "Constitution Drafting works completed, and is accepted by all cabinet members, Now, India can be ruled, not from India, But from England." "இந்திய அரசியல் சாசனம் எழுதப் பட்டு அதன் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டன. இடைக்கால அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்து விட்டார்கள். இந்தியாவை இனி ஆட்சி புரிய முடியும்-இந்தியாவிலே இருந்து அல்ல-இலண்டன் மாநகரிலே இருந்து கொண்டே' - என்ற, ஒரு மர்மமான, குழப்பமான கடிதத்தை அட்லி பிரபுக்கே எழுதிவிட்டார் மவுண்பேட்டன் பிரபு இந்தக் கடிதம் அன்றைய அரசியலிலே ஒரு கலவரத்தை உருவாக்கி விட்டது! இந்திய வைசிராய் அலுவலகத்திலே இருந்து 14.7.1947 அன்று மற்றோர்அறிக்கையும் வெளி வந்தது! அதில்..., "Under the powers confirmed upon me by Article 9-A of the Indian independence Act of 1947." "I here by order for the creation of two Dominions, One as Pakistan and another as Hindustan. Other - wise called India. This will come inforce forth - with.” "India Independence Act of 1919, 1935 will apply this Act also.” - Extra ordinary Gazette of India, 14.7.1947 'நான் இங்கே இரண்டு வகையான டொமினியன் தகுதி பெற்ற நாடுகளை உருவாக்கிட உத்தரவிடுகின்றேன். ஒன்று பாகிஸ்தான் என்றும் - மற்றொன்று இந்துஸ்தான் அல்லது இந்தியா என்றும் அழைக்கப்படும். இந்தத் திட்டம் உடனடியாக அமுலுக்கு வருகின்றது. - 1919, 1935 - ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட சுதந்திரத்தைப் பற்றிய அதே சட்டங்கள்தான் இதற்கும் பொருந்தும்.' -என்று, வைசிராய் மவுண்ட்பேட்டன் பிரபு அலுவலகத்திலே இருந்து 14.7.1947ஆம் நாளன்று வெளிவந்த தனிப்பட்ட இந்திய அறிக்கைக்கு ஏற்பவே, சட்ட திட்டக் குழுவும் அரசியல் சட்டத்தைத் தயார் செய்தது.