பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தேசியத் தலைவர் காமராஜர் முழு இந்திய மக்களுக்காக நாம் என்ன ஆற்றப் போகிறோமோ...! இந்த சஞ்சலத்திற்கிடையே... அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி வரலாறு என்ன? அதை உருவாக்கியது யார்? அதன் வளர்ச்சிக்காக யார் யார் அரும்பாடு பட்டார்கள்? ‘நமக்கு முன்னே, அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை வகித்த தமிழர் வரலாறு என்ன? சாதனைகள் என்ன? அவர்கள் அடிச்சுவடுகள் மேல் நம்மால் நடக்க இயலுமா! என்றெல்லாம் காமராஜர் சிந்திக்க ஆரம்பித்தார்: 1920-ஆம் ஆண்டு, நாகபுரியில் நடைபெற்ற அகில இந்தியத் தேசிய மகாசபைக்குத் தலைமை வகித்த முதல் தமிழரான சேலம் சி. விஜயராகவாச்சாரியாரை நினைவு கூர்ந்தார். அவர் காங்கிரஸ் கட்சிக்கு செய்த சேவைகளை எண்ணிப் பார்க்கலானார்.