பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 257 இந்த அறிக்கையைக்கண்ட இந்தியத்தலைவர்கள் மனநிலையும் - காங்கிரஸ் கட்சியும் மிகக் கவலைக்குள்ளாயின. தலைவர்களிலே சிலர், முகம் சுருங்கிக் காணப்பட்டார்கள். அவர்களிலே ஒருவர் திரு. பண்டித ஜவஹர்லால் நேரு. இந்த அறிக்கையைப் படித்த திரு நேரு, வெளியே தலைகாட்ட மிகவும் வெட்கப்பட்டு, தனது வீட்டிற்குள்ளேயே சோகமான சிந்தனையிலே ஆழ்ந்தார்: அப்போது, இதே அறிக்கையைப் படித்துவிட்டு பண்டித நேருவைப் பார்க்க திரு வல்லபாய் படேல், டாக்டர் இராஜேந்திர பிரசாத், இராஜாஜி, அபுல்கலாம் ஆசாத் போன்றவர்களும் அவர் இல்லத்திற்கு வருகைதந்தார்கள். 'ஏன் சோகமாக உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று கேட்டு விவரமறிய விரும்பினார்கள்.அவர்கள்! 'நாட்டு மக்களிடம், நாம் இந்திய நாட்டிற்குரிய சுதந்திரத்தைப் பெறப் போவதாக வாக்களித்தோம். அந்த வார்த்தைகளுக்கு முற்றிலும் எதிராக இப்போது டொமினியன் தகுதியுள்ள இரு நாடுகளைத்துண்டுதுண்டாக வழங்கப்போகிறோம் என்றல்லவா ஆங்கிலேயர்கள் அறிக்கை விடுத்துள்ளார்கள் எந்த முகத்தோடு நாம் மக்கள் முகங்களிலே விழிக்கப் போகிறோம் ? என்ன நினைப்பார்கள் நம்மைப் பற்றி மக்கள்?" - என்று, துயரம் தோய்ந்த முகத்தோடு நேரு ஒர்ஏக்கப் பெருமூச்சு விட்டவாறே பேசினார்: - “மக்களிடம் போய், டொமினியன் ஸ்டேட் பெற்றதாக ஏன் கூறவேண்டும்? சுதந்திரம் பெற்று விட்டோம் என்று சொல்ல வேண்டியதுதானே! மக்கள் எதையும்கவனத்தில்வைக்கமாட்டார்கள்' என்று, பண்டித நேருவைப் பார்த்து இராஜாஜி கூறி அமைதிப்படுத்த, மற்ற தலைவர்களும் நேரு அவர்களைச்சமாதானப்படுத்தினார்கள்: திரு. மவுண்ட்பேட்டன் பிரபு விடுத்த அறிக்கையைக் கண்டு நேரு என்ன வேதனைப்பட்டாரோ, அதே துயரத்தைக் காந்தி பெருமானும் அடைந்தார். “உயிரற்ற விடுதலையின் வெறுமை’ என்று குறிப்பிட்டார்; அதனால், தலைவர்கள் மனங்களிலே மகிழ்ச்சி தாண்டவமாட வில்லை. 1947 - ஆகஸ்டு 15- ஆம் நாள் கொண்டாடப்படவிருக்கும் விழாக்களிலே என்னால் பங்கு கொள்ள முடியாது' என்பதை மட்டும் உறுதியாக இறுதியாக அறிவித்துவிட்டுக் காந்தியடிகள் கல்கத்தா மாநகர் சென்று விட்டார் - கவலை தோப்ந்த முகத்தோடு: