பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1947 ஆகஸ்டு 14ஆம் நாள் நள்ளிரவு அரசியல் நிர்ணய அவை உறுப்பினர்கள்.அனைவரும் இரவு11 மணிக்கு நாடாளுமன்ற மத்திய அரங்கில் கூடினார்கள் திருமதி. சுசேதா கிருபளானி அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கூட்டத்தில், 'வந்தே மாதரம்' பாடலைப் பாடினார்: திரு. டாக்டர் பாபு இராசேந்திர பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உரையாற்றினார். இரவு 12 மணி அப்போது இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களான, பண்டித ஜவஹர்லால் நேரு, டாக்டர் பாபு இராசேந்திர பிரசாத், டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன், சர்தார் வல்லபாய் படேல், அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, சி. சுப்பிரமணியம் உட்பட அனைவரும் ஒருவர்பின்ஒருவராக அவரவர்பொறுப்பை ஏற்றபோதுஅவையிலே வீரசபதம் செய்து கொண்டார்கள் தலைவர் காமராஜ் ஏற்ற சபதம்! 'இந்திய மக்கள், துன்ப துயரங்கள், தியாகங்கள் மூலம் சுதந்திரத்தை அடையும் இந்தப் புனிதமான நேரத்தில், இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரான கு.காமராஜ் என்ற பெயர் கொண்டநான், பழம்பெரும் பாரதநாடு உலக நாடுகளுக்கு இடையே தனக்குரிய இடத்தைப்பெற்ற, மனிதகுலத்தின்நலம், உலக அமைதி, ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக, முழுமையாகவும் விருப்பத்துட னும் பணி புரிய வேண்டும் என்ற நோக்கத்தை அடைந்திட இந்தியாவின்-இந்தியமக்களின்சேவைக்காக, என்னைப் பணிவுடன் நான் அர்ப்பணித்துக்கொள்கின்றேன்." - என்று, சென்னை மாகாண தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரான திரு. கு. காமராஜ், தனது வீரசபதத்தை டில்லி அரசியல் நிர்ணய சபையிலே பெருமிதத்துடனும் பேரானந்தத்துடனும் ஏற்றுக் கூறினார்.