பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 259 ’’۔ சென்னை மாநிலப் முதல்வரான ஓமந்துர் இராமசாமி ரெட்டியார், கே. என் காளா வெங்கட் ராவ், வி. வி. கிரி, ஆர். வெங்கட்ராமன் போன்ற நெருக்கமானவர்களும் - முக்கிய மானவர்களும் இந்த சுதந்திர விழா கொண்டாட்டத்திலே கலந்து கொண்டார்கள். சென்னையிலே நடைபெற்றசுதந்திரதினவிழாவிலே, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரான காமராஜ் களிப்புரை யாற்றியபோது, காமராஜ் பேசுகிறார்! காந்தியின் தியாக வாழ்க்கையைப் பற்றி எத்தனையோ சிறப்புக்களைக்கூறலாம். அவர்தம் வாழ்நாள்முழுவதையும் நாட்டு மக்களின் சேவைக்காகவே தியாகம் செய்தார். அவர், நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தார்- அதையும் அஹிம்சைவழியில் பெற்றுத் தந்தார்: 'சத்திய வழியிலே அவர் போராட்டத்தை நடத்தினார்: அவருடைய வாழ்க்கையே சத்திய சோதனைதான்! 'காந்தியடிகளுடைய தொண்டைப் பற்றிச்சொல்லிக் கொண்டே போகலாம். அவர், இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார். காந்திஜி, அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்வரை, இந்தியாவின் பாமர மக்கள் தரித்திர நாராயணர்களாய், பேசவும் சக்தியற்றுத் தம் கருத்தை வெளியிடவும் துணிவில்லாமல் நடைப் பிணங்களாக இருந்தார்கள். 'அண்ணலுக்கு புரிந்தது இது! அவர் சிந்தனையை ஏழை எளிய மக்களின் ஆசையை, அபிலாஷைகளை இதயபூர்வமாக உணர்ந்தார்! அவர்களுடைய விருப்பங்களை அரசியலிலே எதிரொலித்தார்: 'இதனால், நாட்டின் சாதாரண மக்களும் எழுச்சி பெற்றார்கள். அவர்கள்தலை நிமிர்ந்து நடந்தார்கள் தங்கள் குரல் எதிரொலிக்கப் படுவதைத் தெளிவாகக் கேட்டார்கள். ஆமாம்! அவர்கள் தங்கள் வழிகாட்டியைக் கண்டு பிடித்து விட்டார்கள் காந்திஜியின் வழியில் அவர்கள் வீர நடைபோட்டார்கள். அதனால் தான் நாடு இன்று சுதந்திரம் பெற்றது. 'காந்தியடிகளால் நாம் பெற்ற பலன்கள் பல. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நம்மை அச்சமற்றவராக்கினார்: 'நாம் யார்க்கும் குடியல் லோம் என்று நம்மை உணரச் செய்தார். பழி, பாவம் தவிர, வேறு எதற்கும் அஞ்சாத உணர்வை