பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 தேசியத்தலைவர் காமராஜர் நம்மிடையே ஏற்படுத்தினார்.சொந்த வாழ்க்கையிலும், நாட்டின் பொது வாழ்க்கையிலும் தன்னம்பிக்கையை வலியுறுத்தினார். இந்தத் தன்னம்பிக்கைதான் நமது நல்வாழ்வுக்கான அடிப்படை யாகும். சுயராஜ்ஜியம் நிலைத்திருக்க, சுபிட்ச வாழ்க்கை உத்திரவாதம் செய்யப்பட, இந்தத் தன்னம்பிக்கை மிக அவசியமாகும். "இவற்றை உபதேசிப்பவராக மட்டும் காந்திஜி இருக்கவில்லை. தம் வாழ்க்கையையே இவற்றுக்கு எடுத்துக் காட்டாகவும் அமைத்துக் காட்டினார். இந்திய நாடு, சுதந்திரம் அடைய வேண்டும் என்ற அவரது எண்ணம், அவருடைய வாழ்நாளிலேயே நிறைவேறிவிட்டது. அதுவரையில், நாம் சந்தோஷப்பட வேண்டியதுதான். அவர் எதற்காகச் சுதந்திரம் கேட்டார்? எந்த இலட்சியத்தை ஈடேற்ற அவர் சுதந்திரப் போரை நடத்தினார்? என்பதைத்தான், நாம் எல்லாம் நன்றாக எண்ணியெண்ணி, எண்ணத்தில் நிலைநிறுத்திப் பார்க்க வேண்டும். வேறு எதற்கும் இல்லை. சுகமாக, நல்வாழ்வு வாழத்தானே! 'இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ வழியில்லை-வயிறாரசோறு கிடையாது. போதிய அளவு உடுக்கத் துணியில்லை. குந்தக் குடிசை கூடப் பலருக்கு இல்லை; படிப்பு இல்லை; பணமும் கிடையாது; சுருக்கமாகச் சொன்னால், சொத்து சுதந்திரம் ஏதுமில்லை, என்று பல கோடி மக்கள் அவதிப்படுவதை நாம் மாற்றியாக வேண்டும். 'இப்படிப்பட்ட கோடானுகோடிப் பேர்களுக்கும் வாழ்வு கிடைத்தாக வேண்டும். இவர்களது வாழ்க்கைத் தரமும் மற்றவர்களைப் போல உயர்ந்தாக வேண்டும். இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும். ஜாதி பேதமின்றி இருக்க வேண்டும் என்பதே காந்திஜியின் இலட்சியமாகும். ‘வாழ்க்கைத் தரத்தில் மட்டுமல்லாமல், சமூக - சமுதாய அந்தஸ்திலும் மக்களனைவரும் சரிநிகர் என்ற உணர்ச்சி நாடெங்கும் நிலவ வேண்டும். தமக்குள் உயர்வு - தாழ்வு என்று எண்ணாமல் மக்கள் வாழவேண்டும் என்ற இலட்சியத்தை காந்திஜி பரப்பினார்: 'இந்த இலட்சியத்தை மக்களிடையே பரப்பி, சர்வோதய சமுதாயத்தை ஏற்படுத்தத்தான், மகான் காந்தியடிகள் நமக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தார் வேறு எதற்காக சுதந்திரம் தேவை?” என்றார்.