பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 26? 'தலைவர் காமராஜ் அவரது பொது வாழ்வில் அன்றுவரை வேறு எந்த விழாவிலும் பொதுக்கூட்டத்திலும் இவ்வளவு விரிவாக - விளக்கமாக உணர்ச்சி பொங்க உற்சாகம் பீறிட்டெழ - உளம் திறந்து பேசியதில்லை' - என்று, காங்கிரஸ் தொண்டர்களும் - தலைவர்களும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டார்கள். டில்லியிலே நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் என்ற தகுதியில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட தலைவர் காமராஜ், அங்கே இருந்து நேராகத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற முறையில் சென்னை மாநகரிலே நடைபெற்ற விடுதலை விழாவிலே வந்து கலந்து கொண்டார். அந்த விழாவிலே, சென்னை மாகாணப்பிரதமர் ஒமந்துர் இராமசாமி ரெட்டியாரும், அவருடைய அமைச்சரவையினரும், பிற அதிகாரிகளும் கோலாகலமாகக் கலந்து கொண்டாடினார்கள். மகாத்மா காந்திக்கு ஜே! பாரத மாதாவுக்கு ஜே! வந்தே மாதரம் என்று சென்னை மாநகர விடுதலை விழாவிலே மக்கள் எழுப்பிய வீர முழக்கம் தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளிலே, பட்டி தொட்டிகளிலே - கிராமம் கிராமமாக, அவரவர் இதய ஒலிகளாக எதிரொலித்தன! சுதந்திர தின விழாவிலே, தலைவர் காமராஜ், காந்தியடிகளது திருவுருவம் பொறித்த சின்னத்தைச் சட்டையிலே அணிந்து கொண்டு, அன்று ஒரே பேரானந்தமயமாகக் காட்சி தந்தார். அவருடன், அவரது நண்பர்களான எஸ்.கே. முத்துசாமி, முருக தனுஷ்கோடி, திருச்சி அருணாசலம், திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை, பி.எஸ். குமாரசாமி ராஜா, பிரதமர் ஓமந்துர் இராமசாமி ரெட்டியார், காளாவெங்கட்ராவ், வி.வி. கிரி ஆர். வெங்கட்ராமன் போன்ற வேறு பல மாவட்ட முக்கிய கட்சி நண்பர்களும் - காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் - பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். காந்தியடிகள் கலந்துகொண்டாரா? 1947-ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா 'ஓர் உயிரற்ற விடுதலையின் வெறுமை" என்று கூறி, புது தில்லியிலே நடைபெறும் முதல் சுதந்திர தின விழாவின் கோலாகலத்திலே கலந்து கொள்ளாமல் வங்க மாநிலத்திலே உள்ள கல்கத்தா நகர் சென்றுவிட்டார் - காந்தியடிகள்!