பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 தேசியத் தலைவர் காமராஜர் இந்திய நாடு சுதந்திரம் பெற்று, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் எல்லாம் அவரவர் பதவிகளை ஏற்றுப் பேரானந்தக் கடலிலே மூழ்கியிருந்தார்கள். ஆனால், காந்திபிரான் அந்த விழாவிலே கலந்து கொள்ளாதது மட்டுமல்ல; ஒரு வாழ்த்துச் செய்தியைக்கூட அந்த விழாவிற்கு அவர் அனுப்பவில்லை! காலமெல்லாம் அந்தச் சுதந்திரத்திற்காக அல்லும் பகலும் பாடுபட்ட அவரின் மனம் என்னென்ன எண்ணியதோடி எவர்கண்டார்? தில் லி மாநாடுக்கு வருகை தந்து, விடுதலை விழாவிலே கலந்து கொள்ளுமாறு எல்லாக் காங்கிரஸ் தலைவர்களும் வற்புறுத்திக் கேட்டு கொண்ட பிறகும், காந்தியடிகள் விழா நிகழ்ச்சிகள் ஒன்றிலும் அவர் கலந்து கொள்ளாதது ஒரு வருந்தத்தக்க சம்பவமாகவே தென்பட்டது. ‘பூசலும் - குழப்பமும் காங்கிரஸ் கட்சியின் உள்ளுக்குள்ளேயே இருக்கிறது’ என்று, திருமதி ராஜகுமாரி அமிர்கெளரிக்கு காந்தியடிகள் எழுதிய கடிதத்திலேயே வருத்தத்துடன் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இந்திய நாடு விடுதலை பெறவேண்டுமென்று எந்த காந்தி பெருமான் இரவும் பகலுமாக அரும்பாடுபட்டாரோ, அந்த உத்தமர் கலந்து கொள்ளாமலேயே டில்லி மாநகரில் முதல் சுதந்திர விழா நடைபெற்றது. பண்டித நேரு, டாக்டர் இராசேந்திரபிரசாத், சர்தார் வல்லபாய் படேல், அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலே அப்போது இருந்த அபுல்கலாம் ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் எல்லாம், கல்கத்தாவிற்கு நேரிலே சென்று எப்படியாவது காந்தியடிகளை எவ்வழியிலாவது வற்புறுத்திச்சமாதானம் செய்து விழாவிற்கு அழைத்து வந்திருக்கலாம் வந்திருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ இப்படியொரு சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றதாகக் காங்கிரஸ் வரலாறு கூறவில்லை! அதன் எதிரொலிதானோ என்னவோ இன்றும் காங்கிரஸ் கட்சி அகில இந்தியா முழுவதும் எதிலும் தோல்வி முகத்தோடு அவமானப்பட்டு அலைந்து கொண்டிருக்கின்றது! .! من يخرج بب اهلأنمي يي يخني శ్లో క్ష శ్లో ఫ్ల ఫ్ల