பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ઉછે சாய்ந்தது சத்திய சோதனை: அழிந்தது அகிம்சை அறம்! கல்கத்தா நகரிலே உள்ள காந்தியடிகள் தம் நெருங்கிய ஒரு முஸ்லிம் நண்பரின் இல்லத்திலே, ஆகஸ்டு 31-ஆம் நாளன்று நள்ளிரவுதுயில் கொண்டிருந்தார்: அப்போது சில இளைஞர்கள் கோபத்துடன் வந்து, அவர் துங்கிக்கொண்டிருந்த வீட்டினுள் நுழைந்திடக் கதவைத் தடதடவென்று தட்டினார்கள். காந்தியடிகள் மீது வெடிகுண்டு அந்த முஸ்லிம் நண்பர் கதவைத் திறந்தார். அவருடன் காந்தியடிகளும் பின்புறமாக நின்றுகொண்டிருந்தார்: ஆத்திரத்துடனும் - அடக்க முடியா சினத்துடனும் வந்த அந்த இளைஞர்களைப் பார்த்துக் காந்திபிரான் வணக்கம் கூறினார்! வந்தவர்களைப் பார்த்து என்ன என்று கேட்டார்! அப்போது ஒர் இளைஞன் காந்தி பெருமான்மேல் ஒரு செங்கல்லை வீசி எறிந்தான் அந்தக்கல் அவர்மீது படாமல் அடுத்து நின்றிருந்த முஸ்லிம் ஒருவரைத் தாக்கியது. இளைஞன் ஒருவன், காந்தியடிகளை நோக்கி ஒரு தடியை வீசினான்! அந்தத் தடி நூலிழை தவறியதால் வேறொருவர் மேலேபட்டது! கூட்டம் ஒரு கூச்சலை எழுப்பி காந்தி ஒழிக’ என்று கூப்பாடிட்டது. இவ்வாறு காந்தியடிகளைத் தாக்க வந்த செய்தி, அதற்குள் அங்கிருந்த காவல்துறைக்கு எட்டிற்று! விரைந்து வந்தனர்.காவலர்! கலகம் புரியும் கும்பலைக் கலைத்திடக் காவலர்கள் கண்ணிர்ப் புகைக் குண்டுகளை வீசினார்கள்! இந்தச் சம்பவம் ஏன் எற்பட்டது? காரணம் என்ன? என்று புரியாமல் அங்கே ஒரே குழப்பம் நிலவியது!