பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 தேசியத் தலைவர் காமராஜர் இதைக் கண்ட காந்தியடிகள், கலகம் செய்ய வந்தவர்கள் மனதைத் தொடும் முறையிலும், பஞ்சாப் மாநிலத்தின் மதக் கலவரக்காரர்கள் உணர்வுகளிலே ஒரு திருப்புமுனை உருவாகும் வகையிலும், "சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்து அந்த இரவிலேயே உண்ணாநோன்பை ஆரம்பித்தார். அவர்திடுதிப்பென்று, நள்ளிரவிலேதுவங்கிய உண்ணாவிரதம், நாட்டிலே ஒரு பரபரப்பை எழுப்பி உலுக்கியது. எல்லா இனமக்களும் அடிகளாரைச் சந்தித்தார்கள் "இனிமேல் மதக் கலவரத்தைக் கைவிட்டு விட்டு அமைதியாகப் பணியாற்றுவோம்' என்று.அவரிடம் உறுதி கூறினார்கள் மதத் தலைவர்கள் எல்லாம் அங்கே ஒன்று கூடி, அண்ணல் காந்தியாரை அணுகிப் பேசி அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டார்கள்! 1947ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம் 4-ஆம் நாள் இரவு, வங்காள முதலமைச்சர் ஷாஹித், எச். எஸ். சுஹ்ரவர்த்தி அளித்த ஆரஞ்சுப் பழச் சாற்றைப் பருகி, காந்தியடிகள் தனது உண்ணா நோன்பைக் கைவிட்டார்: மதக் கலவரங்களால் அமைதியை இழந்துவிட்ட மக்களுக்கு, ஒரு முழு நம்பிக்கையை அவர்கள் மனதில் உருவாக்கிட வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார்: பாகிஸ்தான்ஹைகமிஷனர், மெளலானா அபுல்கலாம் ஆசாத், பிரதமர் பண்டித நேரு, ஆர்.எஸ்.எஸ்., இந்து மகா சபை சார்பாகத் திரு, கணேஷ்தத் ஆகிய அனைவரும் காந்தியடிகளிடம் நாட்டில் அமைதி காப்போம்” என்று நேரிடையாக வருகை தந்து அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு உறுதியளித்தார்கள். டாக்டர் ராஜேந்திரபிரசாத் அவர்களது வேண்டுகோளின்மீது உருவான அமைதி மொழி உறுதியை, இந்து மகா சபை மட்டும் எதிர்த்தது கடுமையாக அதைக் கண்டித்தது! அப்போது, காந்தியடிகள் மீது ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. நல்லவேளையாகக் குறிதவறி அவர் நூலிழையில் உயிர் தப்பிவிட்டார். மறுநாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் தவறான பாதையில் சென்று என்மீது வெடிகுண்டு வீசிய இளைஞன் மீது யாரும் கோபப்படக்கூடாது. நான் இந்து சமயத்தின் எதிரி என்று அந்த இளைஞர் எண்ணுகிறார் போலத் தோன்றுகிறது எனக் குறிப்பிட்டார் காந்தியடிகள்.