பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 265 மகாத்மா காந்தியின் மேலே வெடி குண்டை வீசிய அந்த இளைஞனைக் காவலர்கள் பிடித்து விட்டார்கள். 'அவனைக் கொடுமைப் படுத்த வேண்டாம் ' என்று காந்தியடிகள் காவல்துறை ஐ.ஜி.யைக் கேட்டுக் கொண்டார். அந்த இளைஞன் பெயர் என்ன தெரியுமா? மதன்லால்! அவன்மீது கொலை வழக்கும் தொடரப்பட்டது நீதிமன்றத்தில் அவன் நிறுத்தப்பட்டான்! 1948- ஜனவரி 30-ஆம் நாள் காந்தி பெருமான், டெல்லியில் தனது தள்ளாத வயதுகாரணமாக, பேத்திகளான ஆபாகாந்தி, மனுகாந்தி புடை சூழ, அவர்களது தோள்பட்டைகளைப் பற்றி, ஏதோ பேசியவாறு, பிரார்த்தனை நடக்கும் மேடைக்கு நடந்து வந்து கொண்டே இருந்தார் அன்று வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்குப்பிரார்த்தனை மேடைக்கு வரவேண்டிய காந்தியடிகள், பத்து நிமிடங்கள் தாமதமாகக் கூட்டத்திற்கு வருகை தந்தார்: அண்ணல் காந்தி பெருமானிடம், மத்திய உள்துறை அமைச்சர், சர்தார் வல்லபாய் படேல் பேசிக்கொண்டே இருந்து விட்டதுதான் அதற்குக் காரணமாகும். காந்தியடிகள் வருகையைக் கண்ட டில்லி பிர்லா அரண்மனையின் தெய்விக வழிபாட்டு மக்கள் எல்லாம் எழுந்து நின்று, வழிவிட்டு விலகி, அவரவர் கைகளைக் கூப்பி, அவருக்கு வணக்கம் செய்தவாறே காட்சி தந்தார்கள். வழிபாடு புரியவந்த மக்களது அன்பையும் - பண்பையும் எதிரொலித்து வணங்கி-வணங்கி மகிழ்ந்தபடியே பிரார்த்தனைக்காக அடிகளார்.விரைந்து வந்து கொண்டிருந்தார். இடப்பக்கம் நின்றுகொண்டிருந்த கூற்றுவன் ஒருவன், திடீரென எழுந்து வேகமாக வந்தான். அடிமையால் இருண்ட இந்திய தேசத்திற்கு விடுதலை ஒளி விளக்கை ஏற்றித் தந்து அஹிம்சையின் அவதாரமாக நடமாடி வந்த பெருமானின் தாளஞ்சலியை புரியத்தான் அவன் வருகிறானோ - என்று எண்ணி, காந்தி பெருமான் அவர்கள் - அவனது கைகளைப் பிடித்துக்காலில் விழுவதைத் தடுக்க முயன்றார்: மனிதனை மனிதன் பாதம் தொட்டுப் பணியும் பூஜா மனோபாவம், காந்தி பெருமான் அவர்களுக்கு ஒவ்வாத ஒன்று!