பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தேசியத் தலைவர் காமராஜர் அதனால், அவருடையபேத்திகளில் ஒருத்தியானசெல்விமனுகாந்தி அவனைத் தடுத்தார்: வந்த அந்தக்கூற்றுவன், மனுகாந்தியை இடறித்தள்ளிவிட்டான்! அடிகளாரின் ஜபமாலையும் - அவரது புத்தகமும் அந்தப் பெண்ணின் கையிலே இருந்து சிதறிக் கீழே விழுந்தன: சத்திய சோதனை சாய்ந்தது! மனுகாந்தி எழுந்து வந்து விழுந்த அவற்றை எடுக்க எண்ணிக் கீழே குனிந்தபோது, எதிரே இரண்டடி துரத்தில் எட்டிநின்ற அந்த வகுப்புவாதப் பேயன், தனது கைத்துப்பாக்கியைக் குறியோடு ஏந்தி, மும்முறை சுட்டான், அருட்பெருமானின் மார்பகத்திற்கு நேராக! மூன்று குண்டுகளும் அடிகளார் மார்பிலே பாய்ந்தன: என்றாலும், இரு குண்டுகள் அந்த எலும் புக் கூட்டையும் மீறி ஊடுருவிச் சென்றன: அஹிம்சை தத்துவத்தின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்ந்த காந்தி பெருமானின் அன்பகத்திலே அந்த மீதி ஒரு குண்டும் பாய்ந்தது. மீள மனமில்லாமல், மீறவும் இயலாமல் அது அங்கேயே தங்கிவிட்டது! சுடப்பட்ட ஒரே ஒரு குண்டுக்கே அந்த ஒல்லியான உருவத்தின் கால்கள், பின்னித் தடுமாறிவிட்டன: பிரார்த்தனைக் கூட்டத்து பக்தர் பெருமக்களுக்கு வணக்கம் செய்த காந்தியடிகளது கைகள் இரண்டும் துவண்டு, சோர்ந்து தொங்கிவிட்டன: இரண்டாவது குண்டு, சத்திய சோதனை வாழ்க்கை நடத்திய அந்த மகானின் மார்பிலே பள்ளி கொண்டதும், ஹே ராமா, ஹே ராமா என்று இருமுறை அவரது நா இறைமையைப் பூஜித்தது! அடிகளது திருமுகம் வெளுத்தது சவக்களை சதிராடியது! மார்பிலிருந்து இரத்தம் பீறிட்டுத் தெறித்து மண்ணிலே தேங்கியது. அவர் அணிந்திருந்த அரை ஆடை குருதியிலே குளித்துச் செஞ்சூரியனாகத் திகழ்ந்தது! மூன்றாவது குண்டு, காந்தி பெருமானின் உடலிலே பாய்ந்த ஒசையோடு அவரது அறம் சார்ந்த உடல் கீழே சாய, அதற்கும் முன்னதாக அவர் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியும் விழுந்தது கீழே: