பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ) நாகபுரி மாநாட்டில் முதல் தமிழர்! தமிழ்க் கவிஞன் ஒருவனின் முதல் கற்பனை அழகுபோல அமைந்திருந்தது, பொன் விளைந்த களத்தூர் என்ற குக்கிராமம்! இந்த ஊர், செங்கற்பட்டு மாவட்டச் சிற்றுார்களிலே ஒன்று! பெயரே பொன்விளைந்த களத்தூர் அல்லவா? ஊர் வளத்தை பிறகு ஊர்வலமாக்க வேண்டுமா என்ன? அதனால்தான், ஊர் பெயருக்கேற்பப் படிக்காகத் தம்பிரான் என்ற புலவர் இங்கே பிறந்தார்: கடவுள் விரும்பும் மெல்லோசை அக் கிராமத்திலே அடிக்கடி கேட்குமே தவிர, வல்லோசை கேட்கும் மக்கள் காதவழி தாண்டியே குக்கிராமத்தில் காணப்படுவார்கள்! யார் வந்த வல்லோசையர்கள்? தீய சொற்களை / எப்போதும் நாவினடியிலே அடக்கி வைத் திருப்பவர்கள் அவர்கள்! மெல்லோசை கேட்கும் குடும்பத்திலேதான் கி.பி. 1852-ஆம் ஆண்டு, சக்கரவர்த்தி சேலம் திரு. சி. விஜயராகவாச்சாரி யார் பிறந்தார். இவர், சென்னை மாநிலக் கல்லூரி, சேலம் நகராட்சிக் கல்லூரி. மங்களுர் அரசுக் கல்லூரிகளிலே பேராசியராகப் பணியாற்றினார் சிறந்த வழக்குரைஞர் என்று நற்பெயர் நாட்டினார். சேலம் நகராட்சி மன்ற உறுப்பினராகவும் பணி புரிந்தார்: வகுப்புக் கலவரம் பத்தாண்டுகள் சிறை: வகுப்புக் கலவர வழக்கு ஒன்று சேலம் நகரில் 1882-ஆம் ஆண்டு நடந்தது! அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக திரு. விஜயராகவாச்சாரியார் வாதாடினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிய குற்றத்திற்காகப் பத்தாண்டுகள் சிறை தண்டனை பெற்றார் அவர் வழக்குரைஞர் ஒருவர், நீதியின் சந்நிதானம் முன்பு உண்மையை நிலைநாட்டி, நல்ல தீர்ப்புப் பெற்றுத்தரவே வாதாடினாரே தவிர, குற்றவாளியை நிரபராதி என்றோ, நிரபராதியை குற்றவாளி என்றோ நிரூபிக்க அல்லர்: