பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 267 பாதங்களிலே இருந்த பாதுகைகள் கழன்று விழுந்தன! காந்திபிரான் காலத்தோடு காலமாகக் கலந்தார். அப்போது காலம், ஐந்து மணியாகிப் பதினேழு நிமிடங்களாயின. இந்தக் கொலை மரண நாடகம், ஐந்தாறு மணித்துளிகளிலேயே நடந்து முடிந்து விட்டது. காந்திபெருமான் கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி நாடெங்கும் இடிகுரலாய் எதிரொலித்தது! சுதந்திரத் தந்தையான அடிகளாரைச் சுட்டுக் கொன்றவன் ஓர் இந்து என்று வானொலி நிலையம் சோகக் குரல் எழுப்பித் தேம்பித் தேம்பி அழுதது அது அவ்வாறு புலம்பியிராவிட்டால் நாட்டிலுள்ள முஸ்லிம்களும் - இந்துக்களும் எண்ணற்ற நவகாளிகளை நடத்தியிருப்பார்கள்! அறம் ஒன்று அழிந்தது அன்று: பாரதமாதா பதைபதைத்து அழுதாள் உலக மக்கள் எல்லாரும் விம்மி விம்மித் தேம்பினார்கள் காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமல்ல; மனித நேயக் காற்று வீசும் திசைகள் எல்லாம் மருண்டுதுடித்தன! அஹிம்சை ஜோதி அணைந்தது! தனிப் பெரும் மனித நேய ஒழுக்கம்தலைகீழானது சத்திய சோதனையின்கருணை சவமானது! அறம் ஒன்றுதுடிதுடிக்க அழிந்தது அரசியலில்! "பிணி பீடித்தோ, விபரீத விபத்தின் விளைவுகட்கோ நான் சாகமாட்டேன்! கொலையாளி ஒருவனிடம் கொள்கைக்காகவே சாவேன்!”என்று, காந்தியடிகள் ஒருமுறை அல்ல; பன்முறை நமக்கு அறிவித்த பிறகே அடிகள் அன்று படுகொலையானார்: அவனி, அழுது அரற்றியது இந்தியத் தலைவர்கள் மட்டுமல்ல; உலகத் தலைவர்கள் அனைவரும் கண்ணிர் விட்டார்கள் அவரது சாவைக் கேட்டுப் பதறி! "ஒரு பைத்தியக்காரன், காந்திஜியின் உயிரைப்போக்கிவிட்டான் ஒளி விளக்கு அணைந்து விட்டது! எங்கும் இருளே மண்டிக் கிடக்கின்றது. என்று, பிரதமர்பண்டிதநேரு வானொலியில்கண்ணிர் உகுத்தார்: தலைவர் காமராஜ் அவர்கள், அப்போது வடார்க்காடு மாவட்டத்திலே உள்ள ஆர்க்காடு என்ற நகரில், கண்ணன்பூங்காஎன்ற சிறுவர்பூங்காவினைத் திறந்து வைத்தார்: