பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 தேசியத் தலைவர் காமராஜர் அந்த விழாவிலே, சட்டமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் கி. ஜானகிராம முதலியாரும் காங்கிரஸ் தோழர்கள் உட்பட அனைவரும் திரண்டிருந்தார்கள் விழாமுடிந்தது! விருந்துண்ணகாமராஜர்அமர்ந்த ார். அப்போது “காந்தியடிகள் கட்டுக்கொல்லப்பட்டார் ஆவி பிரிந்தது!’ என்ற பேரிடிச்செய்தியை வானொலி பரப்பியது! அதிர்ச்சி அடைந்தார்தலைவர் காமராஜர். இடியோசை கேட்ட நாகம் போலானார் என்னவென்றே தெரியாத பிரமை, சூன்யம் அலைமோத வைத்தது அந்தச் செய்தி! உணவு பரிமாறிய இலையை அப்படியே அவர் விட்டு விட்டு, பேயறைந்த முகத்தோடு எழுந்தார். கண்கலங்கினார் கண்ணிர் தன்னையும் அறியாமல் சிதறுவதைக் கண்ட தலைவர் காமராஜின் பாச உணர்வுகள், அவரை தேம்பித் தேம்பி அழவைத்து விட்டன: விழாவிற்கு வருகைதந்திருந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அனைவரும் - தலைவரின் தாங்கொணா வேதனையைக் கண்டு அவர்களில் பலரும் விம்மினார்கள் அங்கே சூழ்ந்திருந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடமும் நண்பர்களிடமும் தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்தார் கண்ணிர் விட்டவாறே அவர் கை கூப்பிக் கேட்டுக் கொண்டார்: 'நமக்குள்ளே இன வேற்றுமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம் எங்கும் மதவெறிப் பேச்சுக்களைப் பேசவேண்டாம்! மன உறுதியாக, மக்கள் தொண்டுகளைப் புரிய மகாத்மா காந்திஜியின்சாவின் மேல் சபதம் ஏற்று உழைத்து வாருங்கள்.” -என்று புலம்பிய உணர்வுகளோடும் கலங்கிய கண்களோடும் மக்களை அவர் கேட்டுக் கொண்ட பின்பு தலைவர் காமராஜ் சென்னை நோக்கிப் புறப்பட்டார். காந்தியடிகளைத் துடிக்கத் துடிக்க துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அந்தக் கயவன் யார்? நாது ராம் விநாயகக் கோட்சே என்ற நயவஞ்சக ஈனப்பிறவி சாதி வெறியன்! பழி தீர்த்துக் கொண்டான் பாவி! §

_\# مما 登 ః 获 孪 裘