பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 தேசியத் தலைவர் காமராஜர் இவர்கள் இருவரும் யார்? அவர்களது அரசியல் வரலாறு என்ன? என்பதை, நாம் சுருக்கமாக அறிந்து கொண்டால்தான், அது மகாத்மா காந்தியடிகள் உயிரோடிருந்தபோது பெற்ற பெரும் தோல்வியை, காமராஜ் அவர்கள், அடிகள் மரணமடைந்த பின்பு, வெற்றி பெற்றிட ஏன் அரும்பாடுபட்டார்? என்ற அரசியல் வரலாற்றின் அருமையை பெருமையை நாம் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். 1938ஆம் ஆண்டில்,இந்திய தேசியக் காங்கிரஸ் மகா சபைக்கு திரு நேத்தாஜி சுபாஷ்சந்திர போஸ் - ஒருமனதாகக் காங்கிரஸ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்: மகாத்மா காந்தியடிகள் திரு போஸ் அவர்களைக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தியதால்தான், அந்த தேர்தலில் எவ்விதக் குழப்பமும் - சர்ச்சையுமின்றி தேர்தல் ஒருமனதாக நடைபெற்றது! அதனால், சுபாஷ் பாபு ஹரிபுரா காங்கிரஸ் தலைவரானார்: 1939-ஆம் ஆண்டு நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மகாசபைத் தலைவர் பதவிக்காக சுபாஷ் பாபு மீண்டும் போட்டியிட்டார்: அதற்குக் காரணம், காங்கிரஸ் மகாசபைக்கு, ஒருவரே இரண்டு மூன்றுமுறை மகாசபைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதால், பாபு இரண்டாம் முறையும் தலைவராகப் போட்டியிட விரும்பினார்: ஆனால், இந்தத் தடவை மகாசபைத்தலைவராகப் போட்டியிட வேண்டாம் என்று காந்தியடிகள் கூறியும், காந்தியண்ணலின் கருத்தை எதிர்த்து-மீறி, திரிபுரா காங்கிரஸ் மகாசபைத் தேர்தலிலே சுபாஷ் பாபு போட்டியிட்டார்: காங்கிரஸ்காரர்களிடையே சுபாஷ் பாபுவின் போட்டி கலகத்தை விளைவித்துக் குழப்பமூட்டியது! பண்டித நேரு போன்ற தலைவர்கள் எல்லாம், போட்டியிடவேண்டாம் என்று பாபுவை அறிக்கைகள் வாயிலாகக் கேட்டுக் கொண்டார்கள். அதனால், காந்தியடிகள் சுபாஷ் பாபுவை எதிர்த்து, இதே பட்டாபி சீதாராமையாவைத் தலைவர் தேர்தலிலே நிறுத்தி வைத்தார். அவருடைய வெற்றிக்காக, காந்தி பிரான் தனது முழுசெல்வாக் கையும், மகா சபையின் சக்தியையும் பயன்படுத்தித் தீவிரமாகப் பணியாற்றினார்: காந்திபெருமான், ஏன் சுபாஷ் பாபுவை மகா சபைத் தலைவர் தேர்தலிலே எதிர்த்தார்? சிந்திக்க வேண்டிய சீரிய பிரச்னை இது!