பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 271 "இந்து முஸ்லிம் பிரச்னையில், எந்த ஒரு முடிவும் காண முடியாமல் நாட்டின் நிலைமை மிகவும் சீர்கேடாக இருந்த அந்தச் சமயத்தில், ஒரு முஸ்லிம் - காங்கிரஸ் தலைவராக வருவது நல்லது' என்று காந்தியடிகள் கருதினார். அதனால், மெளலான அபுல்கலாம் ஆசாத் அவர்களைத் தலைவர் பதவிக்காக அடிகள் போட்டியிடச் செய்தார்: சுபாஷ் பாபு காந்தியடிகளுக்கு எதிராகப் பிடிவாதமாகப் போட்டியிட முயன்றதால், ஜனாப் ஆசாத் மகாசபைத் தலைமைப் போட்டியிலே இருந்து விலகிக் கொண்டார். போட்டியிலே ஈடுபட அவர் மறுத்ததால், காந்தியடிகளும் - காங்கிரஸ் தலைவர்களும் பட்டாபி சீதாராமைய்யாவை (Lp(op மூச்சாகவும் தீவிரமாகவும் ஆதரிக்கும் நிலையேற்பட்டு விட்டது! சூழ்நிலை இவ்வாறு இருந்தும், சுபாஷ் பாபு, காந்தியடிகளின் செல்வாக்கையும், காங்கிரஸ் கட்சியில் அவருக்கு இருந்த பலத்தையும் எதிர்த்து, அவர் அப்போது கடும் சுரத்துடன் நோயுற்றிருந்ததையும் பொருட்படுத்தாமல் கடுமையாகப் பணியாற்றி வெற்றிபெற்றார் பட்டாபி சீதாராமைய்யா தோற்றார்: பட்டாபி தோல்வி, அண்ணல் காந்தியடிகளுக்கு பெரும் வேதனையைத் தந்தது. அதனால், “பட்டாபிசீதாராமைய்யாதோல்வி எனது தோல்வி என்று, பகிரங்கமாகவே கூறி மனச்சாட்சியோடு ஒப்புக்கொண்டார்காந்தி மகான்! தலைவர் தேர்தலிலே வெற்றிபெற்ற திரு. சுபாஷ் பாபு உடல்நிலை கடும் நோயினால் தாக்கப்பட்டதாலும், காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் வெற்றிபெற்றவருக்குரிய முழு ஒத்துழைப்பைக் கட்சி ரீதியாகத் தராததாலும், அவரவர் ஆடிய கட்சி விலகல் விளையாட்டு எதிர்ப்புக்களாலும், சுபாஷ் பாபு தனது தலைமைப் பதவியிலே இருந்து விலகிக் கொண்டார்: அதற்குப் பிறகு - தேசப் பிதாவான காந்தியண்ணல் படுகொலையானதற்குப் பிறகு, முதன் முதலாக நடைபெறும் காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவித்தலைவர் தேர்தல் இது! இந்தத் தேர்தலில், பட்டாபி சீதாராமைய்யாவை அதே தலைவர் பதவிக்காக பிரதமர்நேரு அணிநிறுத்தியிருக்கிறது. அவரை எதிர்த்து படேல் அணி புருஷோத்தமதாஸ் தாண்டனை ஆதரித்திருக்கிறது! புருஷோத்தம தாஸ் தாண்டன், எப்படிப்பட்டவர் தெரியுமா?