பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 தேசியத் தலைவர் காமராஜர் அப்போது இந்தியப் பிரதமராக இருந்த பண்டித நேரு அவர்களையும், அவருடைய அமைச்சரவையினையும்- மத்திய அரசுக் கொள்கைகளையும் மிகக் கடுமையாக, நேரிடையாகவே, அறிக்கைகளாலும், அணிகுழுக்களாலும் எதிர்த்து வந்தவர்: இந்தியா நடுநிலைக் கொள்கைகளோடு உலக நாடுகளிடையே திகழவேண்டும் என்ற பிரதமர்நேருவின் இலட்சியத்தைத் தீவிரமாக எதிர்ப்பவர் தாண்டன்! அதனால், பகிரங்கமாகவே மேடைகள் தோறும் மத்திய மந்திரிசபையைத் தாக்கிப் பேசினார்: பட்டாபியை எதிர்த்துப் போட்டியிடும் தாண்டன்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரதமர் நேரு தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய நேரிடுமோ என்ற அச்சம்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு உண்டாகியிருந்தது! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திரு. காமராஜ் அவர்களுக்கும் அதே அச்சம், பயம் உருவானதால், அவரும் தாண்டனை எதிர்த்துத் தேர்தல்பணி புரியும் சூழ்நிலை உருவானது. ஆந்திராவிலேயும் பிற மாநிலங்களிலும் பலர் தாண்டனை ஆதரித்துத் தலைவர் தேர்தல்பணிகளை ஆற்றினார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே தலைவர் காமராஜ், பட்டாபியை ஆதரித்து மிகக் கடுமையாக வேலைசெய்து வாக்குகளைத் திரட்டினார்: அதனால், தாண்டனுக்கும் பட்டாபிக்கும் தலைவர் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் கடுமையான போட்டியோடு தேர்தல் நடைபெற்றது. பட்டாபி சீதாராமைய்யா 199 வாக்குகளும், தாண்டன் 1085 ஒட்டுகளும் பெற்றதால், பட்டாபி அகில இந்தியக் காங்கிரஸ் மகாசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பட்டாபியைக் காந்தியடிகள் ஆதரித்தார். அவர் காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், காந்தியண்ணல் உயிரோடிருக்கும்போது, அவர் எண்ணம் வெற்றிபெறவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான காமராஜ், தற்போதைய தேர்தலில் பட்டாபியைத் தீவிரமாக ஆதரித்து, தமிழ் நாடு காங்கிரஸ் உறுப்பினர்களின் வாக்குகளைச் சிதறாமல் சேகரித்துப் பட்டாபிக்குப் போட வைத்தார்: