பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 273 114 ஒட்டுகள் வித்தியாசத்தில் பட்டாபி வெற்றிபெற முடிந்ததற்குக் காரணம், அந்த ஒட்டுகள் எல்லாமே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுடையவை; தலைவர் காமராஜால் சேகரிக்கப்பட்டவையாகும். இந்தத் தேர்தலில், சர்தார் வல்லபாய் படேல்கூட பட்டாபியை ஆதரிக்காமல், தாண்டனையே பலமாக ஆதரித்தார். இருந்தும்கூட, தாண்டன் 114 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். பட்டாபி வெற்றிபெற்றபின்பு ஒருமுறை சர்தார் படேலும் - காமராஜரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது, வல்லபாய் படேல் தாண்டனை நான் ஆதரித்ததால் என் மீது உங்களுக்கு கோபம் இருக்காது என்று நினைக்கிறேன் என்றார். 1946 - ஆம் ஆண்டில், இராஜாஜி பிரச்சினை முடிந்த பிறகு, எனக்கும் - உங்களுக்கும் கருத்து வேறுபாடு இல்லையே! என்று காமராஜரிடம் படேல் குறிப்பிட்டார்: காமராஜ் அதற்குப்பதில் கூறும்போது, 'உங்கள் மீது எனக்குக் கோபம் என்பதே எப்போதும் கிடையாது. பட்டாபியை ஆதரித்து, அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் விருப்பம். இதிலே நான் கோபப்பட என்ன இருக்கிறது என்றார். அதற்குப் பிறகு அந்த இரு பெரும் தலைவர்களும் சிரித்துக்கொண்டே நாட்டின் பிற நிலைகளைப் பற்றிப் பேசி மகிழ்ந்தார்கள். ASAS SSAS SSAS SSAS SSAS リを 愛楽を చే: హైళ్ల ఫైళ్ల ":A: "אל" יזא" - "האiי יא^י"