பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ குமாரசாமி ராஜா மூன்றாவது முதல்வர் தமிழ்நாட்டின் இரண்டாவது பிரதமராக இருந்த ஒமந்தூர் இராமசாமி ரெட்டியார் பதவி விலகிய பின்பு, அடுத்தபடியாக சட்டபைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்கு யாரை நிறுத்துவது என்ற பிரச்னை எழுந்தது. அதற்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க இராஜாஜி அணியினரும் - காமராஜ் அணியினரும் தீவிரமாகப் பரிசீலனை செய்து கொண்டிருந்தார்கள். ஆந்திரகேசரி.டி. பிரகாசம்அணியும்-இராஜாஜி அணியும் அந்த நேரத்தில் ஒன்றாக இணைந்து வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கப் பணியாற்றியது. டாக்டர்சுப்பராயன்.அவர்களைத் தலைவர் பதவிக்கு இராஜாஜி அணியினர் வேட்பாளராக நிறுத்தினார்கள். தலைவர் காமராஜ் அவர்களுக்கும் ஒமந்துரர் இராமசாமி ரெட்டியாருக்கும் இடையே, அந்த நேரத்தில் அரசியல் தொடர்பு சரியாக இல்லாமல் கருத்து வேறுபாடிருந்தது. ஒமந்துார் ரெட்டியார் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாத குழப்பச் சூழ்நிலை இருந்தது. காமராஜ் அணியினர் பலருக்கு, குறிப்பாகச் சட்டசபை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு ரெட்டியார் மீது முழுத் திருப்தி இல்லை. அரசு நிர்வாக இயந்திரங்களில் சட்டசபை உறுப்பினர்களுக்கு அளிக்க வேண்டிய வசதி வாய்ப்புப் பொறுப்புகளை ஓமந்துாரார், அவர் ஆட்சியின்போது, தரவில்லை என்ற மனக்குறையே அவர்களிடம் மேலோங்கி எதிரொலித்தன. தினசரி அரசு நிர்வாக இயந்திரத்தில் தலையிட்டு, சட்டசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தத்தம் தொகுதிக்கு உரிய வசதிகளைச் செய்து கொடுக்க விரும்பினார்கள்.