பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 275 அவற்றில் நியாயத்திற்கு விரோதமானவை இருந்ததால் ரெட்டியார் அவற்றை அனுமதிக்க மறுத்துவிட்டார்; அதனால், அவர்களுக்கு அவர்மீது வெறுப்பும் காழ்ப்பும் தலைதூக்கின. தலைவர் காமராஜ் அணியினர் பலர், எம். பக்தவத்சலம் அவர்களைத் தலைவர் தேர்தலிலே நிறுத்த வேண்டும் என்று தலைவர் காமராஜ் அவர்களிடம் பிடிவாதமாக நின்று வற்புறுத்தினார்கள். அதற்கேற்பத் தலைவர் அவர்கள், பக்தவத்சலத்தையே சட்டசபைத் தலைவர் பதவிக்கு நிறுத்துவதென்று முடிவெடுத்து, ரெட்டியாருக்கும் தூது அனுப்பிவிட்டார். முதல்வர் பதவியை ஏற்றிடத் தயாராகுங்கள் என்று தலைவர் காமராஜ் பக்தவத்சலத்திற்கும் கூறிவிட்டார். இராஜபாளையம் நகரைச் சேர்ந்த பி.எஸ். குமாரசாமி ராஜா, 'தினமணி ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம், சி. சுப்பிரமணியம் என்ற மூவர் குழுவிடம், முதல்வர் பதவிக்கு திரு. பக்தவத்சலம் அவர்களை நிறுத்தும் நிலையை, ரெட்டியாருக்குச் சொல்லி யனுப்பினார் - தலைவர்காமராஜ்! மூவரும் சென்று திரு ரெட்டியாரிடம் தலைவர் காமராஜ் கூறிய யோசனையைத் தெரிவித்தார்கள். அதற்கு அவர்ஒரேபிடிவாதமாய், 'பக்தவத்சலத்தை ஏற்க மாட்டேன்' என்று மறுத்துவிட்டார். திரு. பக்தவத்சலம் முதல்வராக வருவது திரு. சி. சுப்பிரமணியம், திரு. டி.எஸ். சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் மனநிறைவைத் தரவில்லை என்று தலைவர் காமராஜரிடம் அவர்களே நேரில் கூறிவிட்டார்கள். அப்படியானால், வேறு யாரைத் தலைவராக நிறுத்தலாம்; உங்களுடைய முடிவு என்ன?’ என்று, தலைவர் காமராஜ் அவர்களையே திருப்பிக் கேட்டார். ஒமந்துரார் அமைச்சரவையிலே வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த திரு. குமாரசாமி ராஜாவைத் தலைவர்பதவிக்கு வேட்பாளராக நிறுத்தலாம் என்று, திரு டி.எஸ். சொக்கலிங்கமும், திரு. சி. சுப்பிரமணியமும் தங்கள்முடிவை-தலைவர்காமராஜரிடம் தெரிவித்தார்கள். அதற்குத் தலைவர், உங்களுடைய கருத்தை நான் ஏற்கிறேன்! ஆனால், ராஜாவை ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுப்பை நீங்கள்தான் ஏற்க வேண்டும் என்ன, சரிதானா என் முடிவு? என்றார் காமராஜ்!