பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 தேசியத் தலைவர் காமராஜர் இந்த நேரத்தில், இதை அறிந்த ஒமந்தூரார் நிபந்தனை ஒன்றை விதித்தார் குமாரசாமிராஜாவைத் தலைவர்பதவிக்கு நிறுத்துங்கள் நான் விலகிக் கொள்கிறேன் என்றார் ஓமந்தூரார் தினமணி ஆசிரியர் சொக்கலிங்கத்திற்கும் சி. சுப்பிரமணியத் திற்கும் ரெட்டியார் விதித்த நிபந்தனை, சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்தது போலானது! ஒமந்துரார் கருத்தை அறிந்த தலைவர் காமராஜ், மீண்டும் அவரையே குமாரசாமி ராஜாவிடம் தூதாக அனுப்பிவைத்தார்: அப்போது, திரு ராஜா அவர்கள், உடல் நலமின்றிச் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இராஜாவின் உடல் நலமாக இல்லை. நீரிழிவு நோயாளியாக மருத்துவமனையிலே படுத்துள்ளார்: எனவே, முதல்வர் பதவி ஏற்க ஒப்பமாட்டார் என்று தலைவர்காமராஜ் கணித்தார். மருத்துவ மனைக்கு அந்தத்துதுக்குழுவினர் இருவரும் சென்று ரெட்டியார் கருத்தையும் - காமராஜ் எண்ணத்தையும் அவரிடம் எடுத்துரைத்தார்கள். தலைவர் காமராஜ்கருத்தையும்-ஒமந்துரார்நிபந்தனையையும், தூதுக்குழுவினர் சிந்தனையையும் ஏற்ற ராஜா அவர்கள், ஒரு நிபந்தனையை விதித்தார்! இருந்தாலும், பக்தவத்சலம் முதல்வர் என்று காமராஜ் எடுத்த முடிவில் எனக்கும் பங்கு உண்டு. அந்த முடிவை அவர் மாற்றிக் கொண்டால், நான் ஒப்புக் கொள்கிறேன் என்று ராஜா கூறினார். இராஜாஜி அணியும் பிரகாசம் அணியும் ராஜா இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. தலைவர் காமராஜ் அவர்களிடம் அந்தத் துதுக்குழு சென்று, ராஜாவின் நிபந்தனையை அறிவித்தது! காமராஜ் ஏதோ சிந்தனையிலே ஆழ்ந்தார் தர்ம சங்கடமான நிலை தலைவருக்கு! அதனாலே, அவர் கவனம் எங்கோ சிதறியிருந்ததால், தூதுக்குழு உரைத்த முடிவு சரியாகப் புரியாமல் இருந்தது அவருக்கு முதல்வராக பக்தவத்சலம் தேர்ந்தெடுக்கப்படமாட்டார் என்றும், குமாரசாமி ராஜாவைப் முதல்வராக்க முடிவு செய்யப்பட்டு விட்டது என்றும் பக்தவத்சலத்திடம் தெரிவிக்க வேண்டுமே!