பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 277 இந்த நிலையைச் சரிகட்டும் பொறுப்பு, தலைவர் காமராஜ் அவர்களிடமே விடப்பட்டது. மறுநாள் கூட்டப்பேரவைக் கட்சித் தலைவர் தேர்தல் நடைபெற்ற போது, தலைவர் பக்தவத்சலத்திடம் நடந்த ராஜா வரலாற்றைக் காமராஜ் கூறி சமாதானம் செய்தார்: தலைவர் தேர்தல் நடந்தது! இராஜாஜி அணியுடன் இணைந்த பிரகாசம் அணியும் தோற்றது: ஒமந்துரார், தாம் வாக்களித்தவாறு விட்டுக் கொடுத்து, காமராஜ் அணியுடன் ஒன்று சேர்ந்ததால், இராஜாபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா முதல்வரானார். தலைவர் காமராஜ் மீது இதர காங்கிரஸ் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வைத்துள்ள நம்பிக்கைக்குரிய அளவுகோலே குமாரசாமிராஜாவின் வெற்றியாக அமைந்தது. பிரகாசம் அமைச்சரவையில், விவசாய மந்திரியாகவும், இராஜாஜி அமைச்சரவையில் பொதுத்துறை அமைச்சராகவும், ஓமந்துரார் மந்திரி சபையில் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்த அனுபவத்தால் குமாரசாமிராஜா முதல்வர் பதவியிலும் வெற்றிக்கொடி நாட்டினார். 1948 முதல் 1952-ஆம் ஆண்டுவரை சென்னை மாநிலத்தின் - முதல்வராக அவர் இருந்தார். குமாரசாமி ராஜாசிறந்த தேசாபிமானி! பின்னர் ஒரிசா மாநில ஆளுநராகவும் பணியாற்றினார்: இராஜாபாளையம் நகர் இன்று தொழிற்பேட்டையாக மாறி உள்ளதற்குக் காரணம், பிரதமர் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் சீரிய உழைப்புத்தான் என்றால் அது மிகையாகாது! தீண்டத்தகாதவர்கள் என்று கூறப்பட்ட ஆதிதிராவிட மக்கள் கோவில் நுழைவுக்கான சட்டத்தை இயற்றினார்.குமாரசாமி ராஜா குமாரசாமி ராஜா சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலே தங்கிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்தார்.