பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ઉછે தனக்குத் தானே சரித்திரம்; தன்மானத்தோடு திரும்புகிறது! 1950-ஆம் ஆண்டு! சக்கரவர்த்தி இராஜகோபாலாசாரியார், இந்திய விடுதலை பெற்ற பிறகு, இந்திய முதல் கவர்னர் ஜெனரலாக 1948ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் நாள் முதல் 25-ஜனவரி 1950-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்: தலைவர் காமராஜ், புதுதில்லி போகும்போதெல்லாம், இராஜாஜியை சந்திப்பார் தமிழ்நாடு அரசியல் நிலைமைகளையும் - காங்கிரஸ் கட்சியின் போக்குகளையும் இருவரும் மனம்விட்டுப் பேசுவார்கள் டில்லி சென்ற பின்பும் இராஜாஜியின் தமிழக அரசியல்: 1950-ஆம் ஆண்டில், புதுடில்லி சென்ற காமராஜ், இராஜாஜியை ஒருமுறை சந்தித்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலைப் பற்றிப் பேச்சு எழுந்தது. “எப்போது வருகிறது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தல்?” என்றார்.இராஜாஜி! 'ஆகஸ்டு மாதம் 29-ஆம் நாள் நடக்க இருக்கிறது' என்றார் தலைவர்காமராஜ்! 'அந்த தேர்தலில், 1940-ஆம் ஆண்டில் தங்களிடம் போட்டியிட்டுத் தோற்றுப்போன திரு. கோவை சுப்பையாவைத் தேர்வுசெய்தால் என்ன? என்று கேட்டார்.இராஜாஜி. 'தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் கோவை சுப்பையா வெற்றி பெறுவதில் எனக்கொன்றும் கருத்துவேறுபாடு இல்லை" என்றார் தலைவர்காமராஜ்! கோவை சி.பி. சுப்பையா அவர்களிடம், இராஜாஜி காமராஜரிடம் கலந்துரையாடிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் பற்றிய மேற்கண்ட விவரங்களை எல்லாம் தெரிவித்தார்: