பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 279 சுப்பையாவிடம் நடைபெறப் போகும் தேர்தலைப் பற்றிக் கூறியவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலான திரு இராஜாஜி அல்லவா? அதனால், அவர் இரவும் பகலும் ஓயாது தலைவர் தேர்தலில் தான் வெற்றி பெற்றிடச்சுறுசுறுப்பான பணிகளில் ஈடுபட்டார். இது இயல்புதானே! "History repeats itself"67&lp 3(Sãojoiul), 1940-3,6-16, 15 tigouff மாதம் 15-ஆம் நாள், சென்னை மாநகரில் நடைபெற்ற ஒரு சரித்திர நிகழ்ச்சி மீண்டும் அதே சென்னையில் 1950-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ஆம் நாள் நடந்தது. முடிவு என்னவென்றால், அதே தலைவர் தேர்தல் போட்டியில் பழைய ஆட்கள் பெற்ற வெற்றியும் தோல்வியும் தான் நடந்தது! கோவை சுப்பையா, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எல்லாம், காங்கிரஸ் தலைவராகத் தன்னைத் தேர்ந்தெடுக்குமாறு எல்லோரையும் ஒவ்வொருவராக நேரிலேயே சென்று பார்த்துக் கேட்டுக் கொண்டார்! சுப்பையா, தலைவர்தேர்தல் போட்டியில் தீவிரமாக ஈடுபட்டுச் செயல்படுவதைக் கண்ட காமராஜ் அணியினர் பலர், தலைவர் காமராஜ் அவர்களிடம் அதைத் தெரிவித்தது மட்டுமல்ல; அவர் தேர்தலிலே நிற்பது தங்களுக்குத் திருப்தி இல்லாத ஒன்று என்பதையும் சுட்டிக் காட்டினார்கள் வரலாறு மீண்டும் திரும்புகிறது! அப்போது காமராஜ், சுப்பையா மீது அதிருப்திப் பட்டவர்களிடம், “ஏன் அவரும்தான் ஒருமுறை தலைவராக வந்து போகட்டுமே! அதனாலே, நமக்கு என்ன நட்டம்?' என்றும் சமாதானம் செய்தார்! 'இராஜாஜி அணி மீண்டும் தலைவராக வருவதைக்காட்டிலும், தாங்களே இந்தமுறையும் தலைவராக வரலாமே!’ என்று எதிர்ப்பாளர்கள் எதிர்பதில் கூறினார்கள்! வேறு வழியில்லாத தலைவர் காமராஜ், தொண்டர்கள், பிற மாவட்டக் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் உணர்ச்சியை, ஒருமித்த கருத்தை மீற முடியாதவராய், இறுதியில், அவரேதலைவர் தேர்தலில் நிற்கப் போவதாகத் தமது அணியினர் அனைவருக்கும் தெரிவித்துவிட்டார்.