பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 தேசியத் தலைவர் காமராஜர் இதனைக் கேள்விப்பட்ட கவர்னர் ஜெனரல் இராஜாஜி, திகைப்படைந்தார் இருந்தாலும், போட்டியிலே இருந்து சுப்பையாவை விலகுமாறு அவர் கூறவில்லை. அதனால், சுப்பையா மேலும் பரபரப்புடன் பணியாற்றினார். தேர்தல் ஆகஸ்டு 29-ஆம் நாள் மிகவும் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்றது. கவர்னர்ஜெனரல் இராஜாஜியின் நேரடி ஆதரவுசுப்பையாவுக்கு உள்ளதால், தேர்தல் முடிவு எப்படி அமையுமோ என்று தமிழகக் காங்கிரஸ்காரர்கள் பொறுப்புடன் தத்தமது வாக்குகளை அளித்தார்கள். அதன்முடிவு: காமராஜ் 155 வாக்குகளைப் பெற்றார்: கோவை திரு. சுப்பையா 99 ஒட்டுக்களைப் பெற்றார்: தலைவர் காமராஜ் தேர்தலில் மீண்டும் வாகை சூடியதாக அறிவிக்கப்பட்டது. 1940ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தேர்தலில், இதே கோவை சுப்பையா இராஜாஜி அணியினரின் ஆதரவோடு தலைவர் காமராஜ் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு 100 வாக்குகளைப் பெற்றுத் தோல்வி கண்டவர்: தலைவர் காமராஜ், அந்தத் தேர்தலில், அவருடைய அரசியல் ஆசானான சத்தியமூர்த்தியின் ஆதரவோடு, அப்போதும் இதே கோவை சுப்பையாவையும்- இராஜாஜி அணியையும் எதிர்த்து முதன் முதலில் போட்டியிட்டு 103 ஓட்டுக்களைப் பெற்று வெற்றி அடைந்தார்: 1940ஆம் ஆண்டில் இராஜாஜி அவர்கள் சாதாரண இராஜாஜி! முன்னாள் கவர்னர் ஜெனரல் என்ற தகுதியைப் பெறாத இராஜாஜி! ஆனால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களாலும், காந்தியடிகளாலும் ஆதரவு காட்டப்பட்ட செல்வாக்குப்பெற்ற இராஜாஜி ஆவார். அத்தகைய செல்வாக்கை எதிர்த்து முறியடித்து தலைவர் காமராஜ் அந்த நேரத்தில் 103 வாக்குகளைப் பெற்றார்: தமிழ் நாட்டின் அரசியலிலும் சரி, தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியிலேயும் சரி, அப்போது முதன் முதலாகப் பிளவுபட்ட காமராஜ் அணி - இராஜாஜி அணி என்ற அணிப்பிளவுநோய் வளர்ந்து முற்றி தீராத நோயாகி - அது அவர்கள் இருவரும் சாகும்வரையிலும் இரத்தமும் சீழுமாய் ஒழுகி நாற்றமடித்துப் புரையோடி நீடித்திருந்தது.