பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 28? 1950-ஆம் ஆண்டான இந்த முறை, தலைவர் காமராஜ், கோவை சுப்பையாவை எதிர்த்துப் போட்டி போட்டு 155 வாக்குகளைப் பெற்று சுப்பையாவைத் தோற்கடித்தார். 1950-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 20-ஆம் நாள், நாசிக் என்ற வடநாட்டு நகர்ஒன்றில் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபை நடந்தது. அதாவது, "History repeats itself" என்ற வகையில், அதே சரித்திர சம்பவம் மீண்டும் நகரில், அதே கட்சியில், அதே இரு ஆட்களுக்கு இடையே அதே தேர்தலில் நடந்தது என்பது வரலாறு பெற்ற பெருமையோ, சிறுமையோ யாரறிவார் இதை பராபரமே! தலைவர் பதவிக்கு மூவர் போட்டி! அந்தப் பேரவையில், அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்பதற்கான தேர்தல் நடைபெற்ற போது, காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் மூவர் போட்டிக் களம் கண்டனர்! புருஷோத்தம தாஸ்தாண்டன், ஆசார்ய கிருபளானி, சங்கர்ராவ் தேவ் என்பவர்களே அந்தக் காங்கிரஸ் மூவர்: மும்முனைப் போட்டியில் நடைபெற்ற அந்தத் தேர்தலில் 1306 வாக்குகளைப் பெற்று புருஷோத்தமதாஸ் தாண்டன் வாகை சூடினார்; காங்கிரஸ் கட்சித் தலைவரானார்: ஆசார்ய கிருபாளனி 1092 வாக்குகளும், தேவ் 202 வாக்குகளும் பெற்றுத் தோல்வி கண்டதால், தாண்டன் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபையின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஏன் இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், 1948-ஆம் ஆண்டில் நடைபெற்ற அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மகா சபைத் தேர்தலில், தலைவர் காமராஜ், அப்போது திரு. தாண்டனைக்கடுமையாக எதிர்த்ததுபோல, 1950-ஆம் ஆண்டுத் தேர்தலில் அவர் எதிர்க்கவில்லை என்பதற்காகவே! காரணம், அப்போது காந்தியடிகளால் சுபாஷ்பாபுவை எதிர்த்து நிறுத்தப்பட்ட பட்டாபி சீதாராமையா தோற்றுப் போய், காந்தியண்ணல் பெயருக்கே ஒரு சிறு களங்கம் ஏற்பட்டிருந்தது. அதனால், காந்திபெருமான் இறந்த பிறகு மீண்டும் பட்டாபி இந்திய காங்கிரஸ் தலைவராக நிறுத்தப்பட்ட ஒரு வாய்ப்பு உருவானதால், இப்போது அவர் வெற்றிபெற்று, காந்தியடிகளுக்கு ஏற்பட்ட அந்தச் சிறுகளங்கம் துடைக்கப்படல் வேண்டும் என்ற