பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 தேசியத் தலைவர் காமராஜர் தனியா வேட்கையால்தான், அப்போது தாண்டனை எதிர்த்து, 1948-இல் காமராஜ் அவர்கள் கடுமையாகப் பணியாற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர்வாக்குகளைச் சிதறாமல் சேகரித்துப் போட்டு, பட்டாபியை வெற்றிபெற வைத்தார்: இந்த முறை, அதாவது 1950ஆம் ஆண்டின்போது, யாராவது ஒருவர் காங்கிரஸ் தலைவராக வரட்டும் என்ற கட்சிக் கொள்கைக்காகத் தலைவர் காமராஜ் பணியாற்றியதால், புருஷோத்தமதாஸ் தாண்டன் தக்க பெரும்பான்மை ஒட்டுகளுடன் வாகை சூட நேர்ந்தது. அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சிதான் பெரியதே தவிர, தனிநபர்விருப்பு வெறுப்பு அல்ல என்ற இலட்சியத்தோடு தலைவர் காமராஜ் நின்று விட்டார் என்பதை அகில இந்திய அளவிலுள்ள தலைவர்கட்கெல்லாம் நன்கு தெளிய வைத்தார்: அதனால், தாண்டன் வெற்றி பெறுவதிலே தலையிடாமல், காங்கிரஸ் கட்சிக்காக வெற்றியைத் தேடிக் கொடுத்து தேசியத்தின் ஒருமைப்பாட்டிற்கும் தலைவர்காமராஜ் பெருமை தேடித் தந்தார். தாண்டன் தலைவரானதும், அவர் தேசிய காங்கிரஸ் கட்சிக்குச் செய்த அரிய பணி என்ன? பிரதமர் நேருவையும் - அவரது அமைச்சரவைப் பணிகளையும் மிகக் கடுமையாக எதிர்த்ததுதான்! ஒவ்வொரு அரசியல் பிரச்னையிலும், நேரு அவர்களைச் சாடினார் பகிரங்கமாகவே ஒரேகட்சிக்குள்ளே களங்களைக் கண்டு குறைகளைக் குப்பைப்போலக் குவித்தார்! தாண்டன் இவ்வாறே நடந்தால், மத்திய மந்திரிசபை எப்படி அமைதியாக இயங்கும் என்ற சங்கடம் காங்கிரஸ் தலைவர்கள் இடையே இந்திய அளவில் மீண்டும் பரவலாக எழுந்தது. குழப்பத்திலே மிதந்தன மத்திய அரசியல் சம்பவங்கள்: பிரதமர் ஜவஹர்லால் நேருவோடு, யார் யார் முழுமனதுடனும் - திருப்தியுடனும் ஒத்துழைக்க மாட்டார்களோ, அவர்களை ஒன்றுதிரட்டி, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிக்குரிய செயற்குழுவை தாண்டன் நியமனம் செய்தார்: பிரதமர் நேருவுக்குத் தாண்டனது இந்தப் பழிவாங்கும் செயல்களால் நாளும் இடையூறுகள்தான் தொடர்ந்து உருவாயின அதனால், பிரதமர் நேரு, தாண்டன் அமைத்த செயற்குழுவை மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொண்டார். தாண்டன் பிரதமர் நேரு வார்த்தைகளை அவமதித்தார்: