பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 283 நேருவின் இராஜிநாமா? 'செயற் குழுவை மாற்றியமையுங்கள் என்னால் இந்தச் செயற்குழுவில் இயங்க முடியாது' என்றார் நேரு, செவிடன் காதில் ஊதிய சங்குபோல, எதையும் பொருட் படுத்தாமல் தொடர்ந்து செயல்பட்டார் திரு. தாண்டன்! மீண்டும் நேரு கேட்டார். 'செயற்குழுவை மாற்றி அமைக்கிறீர் களா அல்லது எனது பதவி விலகலை ஏற்கிறீர்களா?' என்றார். அதற்கும் தாண்டன் ஊமையாகிவிட்டார். உடனே பிரதமர் நேரு தனது பதவியைவிட்டு விலகுவதாக அறிவித்தார்! காமராஜ் ஏன் தாண்டனை எதிர்த்தார்! 1948-ஆம் ஆண்டின் அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தலில், தலைவர் காமராஜ், தாண்டனை ஏன் மிகக் கடுமையாக எதிர்த்தார்? பட்டாபி வெற்றிக்காக அரும்பாடுபட்டார்? என்ற அவரது கட்சி இலட்சிய உழைப்பின் உயர்வு - பெருமை, எல்லாக் காங்கிரஸ்காரர்களுக்கும் இப்போது மேலும் நன்றாகவே பகிரங்கமாகவே புரிந்தது! அதனால், காமராஜரின் எதிர்கால அரசியல் நுட்பத்தை எடைபோடும் திறமையை, அகில இந்திய அளவில் அனைவரும் புரிந்துகொண்டு வெளிப்படையாகவே அவரைப் பாராட்டினார்கள்: இந்நிலையில், அகில இந்திய தேசிய மகா சபைத் தலைவர் தாண்டனுக்கும், மத்திய அமைச்சரவையின் பிரதமராகப் பணியாற்றிடும் ஜவகர்லால் நேருவிற்கும், உடனடியான பலப் பரீட்சை அகில இந்திய அளவில் உருவாயிற்று! 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாள், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடந்தது. “எனது வாரிசு நேருதான்’ என்று, காந்தியடிகள் அடையாளம் காட்டிய அரசியல் வாரிசுதான் எங்களுக்குத் தேவை' என்று தலைவர்காமராஜ், தில்லியை நோக்கிக் குரல் கொடுத்தார்: - 'நேரு இல்லாவிட்டால் நாடுமுன்னேறாது. காந்தியடிகள்கண்ட இலட்சியங்கள் எல்லாம் அழிந்துவிடும்” என்று, திட்டவட்டமாகத் தலைவர்காமராஜ் அறிக்கை விடுத்தார்.