பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284. தேசியத் தலைவர் காமராஜர் தமிழ் நாட்டில், நேருவின் அரசியல் பலத்தை நிலை நாட்டிட மக்கள் ஆதரவை அவர் திரட்டினார்: கேரளக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களிடமும் - ஆந்திரக் காங்கிரஸ் கட்சி செயல் வீரர்களிடமும் பிரதமர்நேருவின்கரத்தைப் பலப்படுத்தத் தீவிரமான ஆதரவைச் சேகரித்தார். நேருவின் பலத்தை காமராஜ் வளர்த்தார்: தென்மாநிலங்களிலே காமராஜ், பிரதமர் நேருவிற்காகத் திரட்டிய கட்சிப் பலத்தைக் கண்டு தாண்டன் திணறினார் - திகைத்தார்: அகில இந்திய காங்கிரசில் தாண்டன் பலம் குறைந்து- பிரதமர் நேருவிற்குத் தென்மாநிலங்களில் பலம் அதிகரித்து வருவதைக் கண்ட தாண்டன், காங்கிரஸ் கட்சி கூடும் முன்பே, தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்து விட்டார். இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்று, ஜவஹர்லால் நேரு கூறுவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை - ஆதாரமும் இல்லை என்ற காரணத்தைதாண்டன்.தனது அறிக்கையிலே சுட்டிக்காட்டிவிட்டுப் பதவி விலகினார். அப்போது கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் செயற்குழு கட்சிக் கூட்டம், தாண்டன் செய்துவிட்ட ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டது. அதே கூட்டத்தில், எவ்விதப் போட்டியுமில்லாமல், நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே நோக்கமெனக் கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரும் சிந்தித்து, பண்டித நேருவையே அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக்கினார்கள். பிரதமர் நேருவின் கரத்தைப் பலப்படுத்தத் தென்மாநிலங்களிலே தலைவர் காமராஜ் உழைத்த உழைப்பு, அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்கும் ஒர் எழுச்சியாய் அமைந்தது! தாண்டனின் நேரு எதிர்ப்பு, நாட்டில் வளருமானால், அது அடுத்து வரும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ்கட்சியின் வெற்றியைப் பெரிதும் பாதிக்குமே என்று எண்ணிய காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரும், ஒருமனதாகக் கூடி கட்சியின் தலைவர் பதவியினையும் - பிரதமர் பதவியையும் நேரு அவர்களிடமே ஒப்படைத்தார்கள்! இந்தச் சூழ்நிலையைத் தலைவர் காமராஜ்தான் தாண்டனை எதிர்ப்பதன் மூலமும், நேருவை ஆதரிப்பதின் வாயிலாகவும் நாட்டில் நிலை நாட்டினார் என்பதற்காக, எல்லாரும் அவரைப் பாராட்டினார்கள்: