பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 285 தலைவர் காமராஜ் அவர்கள் மதி நுட்பமும் செயல் திறமும் இந்திய நாட்டிற்கு அப்போதிருந்தே பலமாக அறிமுகமானது. அந்தச் சம்வபத்தினால் அவருக்கு அகில இந்திய செல்வாக்கும் பரவலாகவே வளர்ந்து வந்தது. சத்திய மூர்த்தி 1935-ஆம் ஆண்டு லக்நெள என்ற இலட்சுமணபுரியில் இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபைக் கூட்டம் நடைபெற்றது. அதற்குப் பிரதமர் பண்டித நேரு தலைமை வகித்தார். இந்த ஆண்டில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக திரு எஸ். சத்திய மூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டதும், காங்கிரஸ் கட்சிச்செயலாளராகக் காமராஜ் அவர்களைச்சத்திய மூர்த்தி நிறுத்தி வைத்தார். 'காங்கிரஸ் கட்சிச் செயலாளராக இருந்திட எனக்குத் தகுதியில்லை' என்று காமராஜ் கூறியபோது, "நீ செயலாளராக இருக்கத் தகுதியில்லை என்றால், எனக்கும் தலைவராக இருக்கும் தகுதி இல்லை' என்று சத்திய மூர்த்தி கூறி, காமராஜ் அவர்களை வற்புறுத்திச் செயலாளராக்கினார். அவரது ஆசானின் ஆசியே எதிர்காலத்தில் அவருக்கு ஆணிவேராக ஆழ ஊன்றியது. சத்திய மூர்த்தி அவர்கள், தமிழ்நாட்டின் புகழ் மிக்க தலைவர்களுள் ஒருவராக விளங்கினார். சிறந்த வழக்குரைஞர். ஆங்கிலமொழியிலே அவரது நா பல அற்புத உரையாடல்களைப் படைத்தது! தமிழ்ப் பேச்சாளர்களில் அவர்தலைசிறந்த நாவலராக நடமாடினார்: டில்லியிலுள்ள மத்திய நாடாளுமன்றத்திலும் சரி, சென்னை மாகாண சட்டமன்றப் பேரவையானாலும் சரி, சத்தியமூர்த்தி அவர்களின் பேச்சுகள் எதிர்க்கட்சிகளுக்குச் சிம்ம சொப்பனமாகி அலறவைக்கும் ஆற்றல் படைத்ததாகத் திகழ்ந்தன! அவருடைய வாதங்கள் அனைத்தும், குறிப்பாகவும் - சிறப்பாகவும் அனைவராலும் பாராட்டத் தக்கவையாக இருந்தன! 1937-ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னை மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலிலே, ஜஸ்டிஸ் கட்சியிலே புலிபோன்று கர்ஜனை புரியும் ஆர்க்காடு சர். ஏ. இராமசாமி முதலியாரை எதிர்த்து, தம் நாவடிக்கிலியை உருவாக்கி, தோல்வியால் அவரைப் படுகாயப்படுத்தி வீழ்த்தியவர் சத்தியமூர்த்தி!