பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 தேசியத் தலைவர் காமராஜர் சத்தியமூர்த்தி, காங்கிரஸ் கட்சிக்குக் கட்டுப்பட்டுத் தனது கடமைகளைக்கடைசிவரை ஆற்றினார். அதற்குத் தலைவர்காமராஜ் அவர்கள், தோளோடு தோள் நின்று தமது ஆசானுக்கு அமைச்சர் பதவியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணியாற்றினார்: ஆனால் அவர் எதிர்பார்த்தபடி நடக்காதது மட்டுமல்ல, நம்பிக்கைத் துரோகத்திற்கும் பலியானார். அதனால், டில்லி மத்திய சட்டசபையிலேயே சத்தியமூர்த்தி தொடர்ந்து உறுப்பினராகப் பணியாற்றினார்: அன்று முதல் தான் காங்கிரஸ் கட்சியிலே அணிப் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்தன. இராஜாஜி குழு ஒர் அணியாகவும், சத்தியமூர்த்தி குழு ஒர் அணியாகவும் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பிளவு கண்டது! இராஜாஜிக்கு எதிராக, தமிழக அரசியல் திறமையாளர்களான, தலைவர் காமராஜ், ஓமந்துர் இராமசாமி ரெட்டியார், டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா போன்றவர்களை எல்லாம் சத்தியமூர்த்தி தனது அணியிலே சேர்த்துக் கொண்டார்: பாரதியார் பாடல் சத்தியமூர்த்தி சேவை! இந்தியா சுதந்திரம் பெறவேண்டும் என்ற தணியாத வேட்கையால், சி.சுப்பிரமணி பாரதியார் அவர்கள் விடுதலை கீதங்கள் பலவற்றைப் பாடினார்! அந்தப் பாடல்கள் எல்லாம், மக்கள் மனதை ஆவேசமாகக் கவர்ந்தன. அதனால் புதியதோர் தேசிய எழுச்சி மக்களிடையே அரும்பியது! அதைக் கண்ட ஆங்கில ஆட்சி மருண்டது. எனவே, அவ்வாறு வளர்ந்து வரும் நாட்டுப்பற்றை நசுக்கிட, ஆங்கிலேயராட்சி சட்டங்கள் மூலமாக பாரதியார் பாடல்களுக்குத் தடைச் சட்டம் போட்டது. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில், அப்போது பர்மாநாடும் அடிமையாகச் சிக்கி அல்லல்பட்டது. மகாகவி பாரதியாரின் தேசிய கீதப் பாடல்களை, பர்மாவில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் எல்லாம் விடுதலைப்பற்றோடு பாடிப்பாடி மகிழ்ந்தார்கள்: பர்மா ஆளுநராக இருந்த ஆங்கிலேயர், 'பாரதியார் பாடல்களைப் பாடக்கூடாது' என்று அங்கு வாழ்ந்த தமிழருக்குத்