பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 特5 இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியைத் துவங்கிய திரு. ஆலன் அக்டேவியன் ஹியூம் அவர்கள், இவருக்கு அன்று முதல் நெருங்கிய நண்பரானார்: 1884-ஆம் ஆண்டு, பிரம்மஞான சபை நிகழ்ச்சிக் கூட்டம் நடைபெற்றதற்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் பூர்வாங்க கூட்டத்தில் ஆச்சாரியார் கலந்து கொண்டார். திரு. விஜயராகவாச்சாரியார், திரு. ஹியூம் அவர்களது நண்பராக இருந்தார் என்பதால், இவருக்கும் ஹியூம் தகவல் கொடுத்து காங்கிரஸ் கட்சிக் கூட்டத்திற்கு அழைத்திருந்தார். இதேபோல் சேலம் சி. விஜயராகவாச்சாரியார், 1885-ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற கூட்டத்திற்கும் வருகை தந்துள்ளார். அகில இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சிக்குரிய சட்டதிட்டங்களை இயற்றித் தந்த குழுவின் 32பேர்களில் இருந்த நான்கு தமிழர்களிலே இவரும் ஒருவராகத் திகழ்ந்தவர்: கி.பி.1895-ஆம் ஆண்டிலிருந்து 1901-ஆம் ஆண்டு வரை, சென்னை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார் 1916-ஆம் ஆண்டில் டெல்லி மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். காந்தியடிகளின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலே, மதன்மோகன் மாளவியா, சுரேந்திர நாத் பானர்ஜி, தாதாபாய் நெளரோஜி, மோதிலால் நேரு, லாலா லஜபதிராய், ஜவர்லால் நேரு போன்ற எல்லாவிடுதலைப் போராட்ட வீரர்களும் - விஜயராகவாச்சாரியார் நண்பர்களாகத் திகழந்தார்கள் சூரத் நகரில் 1907-ஆம் ஆண்டு, 23-வது காங்கிரஸ் மகாசபை டாக்டர் ராஜ்பிகாரி கோஷ் தலைமையில் நடைபெற்றது. நாற்காலிகள் பறந்த காங்கிரஸ் மாநாடு: காங்கிரஸ் மாநாடு! அந்த மாநாட்டின் தலைவரால், தனது தலைமையுரையை ஆற்ற முடியவில்லை; ஏனென்றால், காங்கிரஸ் மகாசபையிலே இருந்த மிதவாத அணிக்கும், தீவிரவாத அணிக்கும் குழப்பமும் பூசலும் ஏற்பட்டன! நாற்காலிகள் கூட்டத்திலே பறந்து நடனமாடிக் காயத்தை ஏற்படுத்தி, அவரவருக்கு ரத்தத்தை வழியச் செய்தன. ஜெய்ப்பூர் நகர் பந்தலில் விடப்பட்டிருந்த செருப்புகள் எல்லாம் அவரவர் தலையிலே பட்டாபிஷேகம் செய்தன! அதனால், காங்கிரஸ் மகாசபை இரண்டாகப் பிளந்தது! காங்கிரஸில் ஏற்பட்ட முதல் பிளவு இது!