பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 287 தடைச்சட்டம் போட்டார். இந்தத் தடைவிதிப்பு:இந்தியாவெங்கும் பரவ ஆரம்பித்தது. அப்போது தேசிய நாடக நடிகர்களாகத் திகழ்ந்து புகழ்பெற்றிருந்த தியாகி எஸ்.எஸ். விசுவநாததாஸ், எஸ்.ஜி. கிட்டப்பா, பாவலர் கிருஷ்ண சாமி, கே.பி. சுந்தரம்பாள், டி.கே. சண்முகம் போன்றவர்கள் எல்லாம், சுதந்திர வேட்கையை ஊட்டிடும் பாரதியார் பாடல்களையும், வெள்ளையராட்சி எதிர்ப்புப் பண்களையும், தமிழ்நாட்டின் நாடக அரங்குகளிலே பாடிப்பாடி ஆங்கிலேயரின்தடைச்சட்டத்தைத் தவிடுபொடியாக்கி வந்தார்கள்! தமிழகத்து ஊர் தோறும், வீதிகளில் எல்லாம், பொதுக் கூட்டங்களிலே, நாள்தோறும் தியாகி சுப்பிரமணிய சிவா போன்ற தேசபக்தர்கள், பஜனைக்குழுக்களாகவும், கூத்துப் பாடல்களாகவும் பாரதி பாடல்களைப் பாடிப்பாடிவெள்ளையர்தடைச் சட்டத்தைத் தகர்த்தெறிந்தார்கள். குறிப்பாகக்கூறுவதானால், தியாகி சுப்பிரமணிய சிவாஅவர்கள் தொழுநோயால் தாம் துன்புற்ற நிலையிலும்கூட, தர்மபுரி நகர், பாப்பாரப்பட்டி வீதிகளிலே எல்லாம் பாரதியார் பாடலைப் பாடிப் பாடி, சுதந்திர வேட்கையைப் புரட்சியாக மாற்றித் தடைச் சட்டத்தைத்துள்துரளாக்கி வந்தார்! சென்னை மாநில சட்டப் பேரவையின் உறுப்பினராக அப்போது பணியாற்றிவந்த திரு எஸ். சத்திய மூர்த்தி, ஆங்கிலேயர் விதித்திருந்த தடையை எதிர்த்து, சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார் கனல் தெறிக்கப் பேசினார் பாரதியார் பாடல்களின் சிறப்புக்களை விளக்கி - பாடினார்: சத்தியமூர்த்தியின் அந்த வீரஉரைகள் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. அதன் வாயிலாகச் சத்தியமூர்த்தி யின் நாவன்மையினையும் - பாரதியார் பாடல்களின் வீர உணர்ச்சி களையும் அவை பாராட்டி எழுதின! சத்தியமூர்த்தியின் உரையைப் பத்திரிகையில் படித்த பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் பாரதியார் பாடல்களை ஒவ்வொரு ஊரிலும் மூலை முடுக்குகளில் எல்லாம் பாடிக்களித்து, வெள்ளையரின் தடைச் சட்டத்தை மீறி, தேசிய உணர்ச்சியை நாட்டிலே பரப்பினார்கள்; நிலை நிறுத்தினார்கள். இத்தகைய அரிய அஞ்சாமையினையும், நாவன்மையினையும், செயலாற்றும் திறனையும் கொண்ட ஒர் உண்மையான தேசபக்தர் எஸ். சத்தியமூர்த்தி அவர்கள்!