பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 தேசியத் தலைவர் காமராஜர் அத்தகையவர், தமது பெருமையை மறந்து, 'தலைவர்காமராஜ் திறமைகளை வியந்து, காங்கிரஸ் கட்சியில் நீ செயலாளராக இருக்க உனக்குத் தகுதி இல்லை என்றால், தலைவராக இருக்கும் தகுதி எனக்கும் இல்லை!" என்று கூறினாரென்றால், காமராஜ் அவர்களின் தகுதியை நாம் எவ்வாறு புகழ்வது என்று எண்ணிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். டில்லி தலைவர்களுக்கு காமராஜ் அறிமுகம்! மத்திய சட்டசபைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், காமராஜ் அவர்கள் ஒருமுறை அங்கே சென்றார்; டில்லியில் சத்தியமூர்த்தியைச் சந்தித்தார்: தலைவர் காமராஜ் டெல்லி வருகை தந்ததைக் கண்ட சத்தியமூர்த்தி கழி பேருவகை கொண்டார் - வடநாட்டில் உள்ள முக்கியமான காங்கிரஸ் தலைவர்களுக்கு காமராஜ் அவர்களை அறிமுகப்படுத்தியபோது, “காமராஜ், எனது அரசியல் ஆலோசகர், எனது நண்பர், தமிழ் நாட்டின்தலைசிறந்த ஊழியர்” எனத் திரும்பத் @g5bLi gei GlaumGolff (pub, “Sri Kamaraj is an outstanding Congress worker in Tamil Nadu. He is not only my Colleague, but also my Counselor என்று மகிழ்ச்சி பெருகக்கூறினார்என்றால், அவரது உயர்ந்த உள்ளத்தின் மகிழ்ச்சி அளவை எதற்கு ஒப்பிடுவதோ! தலைவர்காமராஜ் அவர்களின் இத்தகைய ஒர் அரசியல் ஆசான், நாவலர் சத்தியமூர்த்தி எவ்விதப் பயனையும் காங்கிரஸ் கட்சியில் அனுபவிக்கவில்லை. தரித்திரத்தோடு போராடியபடியே 1943-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் நாள், சென்னை மருத்துவமனையிலே காலமானார். அப்போது காமராஜ் அவர்கள் தனது அரசியல் ஆசானின் பெரும்பயணத்திலே கூட கலந்துகொள்ளமுடியாமல், அலிபுரம் சிறையிலே அடைபட்டுக் கிடந்தார்! தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித்தலைவராக 1949-ஆம் ஆண்டில்தான், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் வந்தார்: