பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவீரமிருந்தால் என்னைச் சுடு! பொது மக்களை மிரட்டாதே! திருச்சிமாவட்டக்காங்கிரஸ்கட்சிச்செயல்வீரரானதிரு. டி.எஸ். அருணாசலம் திருச்சியில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினார்: மற்ற மாவட்டக் காங்கிரஸ்காரர்களும் அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டு பேசினார்கள்! தலைவர் காமராஜ் பேச முடியாதபடி மேடையை நோக்கி வெங்காய வெடிகுண்டுகளை எதிர்க்கட்சிக்காரர்கள் வீசினார்கள். வெடித்த குண்டுகளைக் கண்ட பொது மக்கள் மூலைக் கொருவராக நாலா பக்கமும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். அதைக் கண்டு அஞ்சாத தலைவர் காமராஜ், திடீரென எழுந்து மிக ஆவேசமாகப் பேசும்போது, 'கூட்டத்திலே கலவரம் ஏற்படுத்த எண்ணாதே! வெடிகுண்டுகளை வீசிப் பொதுமக்களைப் பயமுறுத்தாதே நீங்கள் வீரம் உள்ளவர்களாய் இருந்தால், என் நெஞ்சை நோக்கித் துப்பாக்கியால் கடுங்கள்' என்று தனது சட்டையைத் திறந்து நெஞ்சைக் காட்டிப் பேசினார்: காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அந்தப் பெருமை எனக்கும் கிடைக்கட்டுமே வீரர்கள் பரம்பரையிலே வந்தவர்கள்வியாதியால் இறந்தார்கள் என்றால் பெருமை கிடையாது. rத்திரிய மரபிலே தோன்றிய தசரதன், இறந்த பின்னர் நாணற் புல்லினாலே உடலைச் சம் ஸ்காரம் செய்து ஈமக் கடன்களைச் செய்தார்கள் என்று இராமாயணத்திலே படித்திருக்கின்றோம்" என்று வீரத்தின் பெருமைகளை விளக்கிக் காமராஜ் வீராவேசமாகப் பேசினார்: சிறிது சிறிதாகக் கலைந்து ஒதுங்கிநின்ற கூட்டம், மீண்டும் இறுதிவரை கூடியமர்ந்துதலைவர்காமராஜ் வீரஉரையைக் கேட்டது: அவர், தொடர்ந்து பேசிக்கூட்டத்தை முடித்த செயலால் அஞ்சாமை, அரசியலில் தீரம், பேச்சு சாதுர்யம், திறமை ஆகிய குணநலன்கள் அவரிடம் அன்று முழு அளவிலே காணப்பட்டன.