பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 தேசியத் தலைவர் காமராஜர் 'தலைவர் காமராஜ்தான் காங்கிரஸ் காங்கிரஸ்தான் காமராஜ்!" என்ற சக்தியைத் தமிழ் நாட்டில் உருவாக்கி, தனது வாணாள் கடைசி வரை அதே சக்தியைக் காட்டிய அரசியல் வித்தகராக அவர் விளங்கினார். ஏழை மக்கள் பக்கமே தலைவர்காமராஜ் எப்போதும் இருந்தார் மக்கள் அவரை ஏழை பங்காளன் என்று புகழ்ந்து, அவர் வார்த்தை களை அகத்திலே ஏற்று, தேசிய விரோத சக்திகள் அவரைக் கண்டு அஞ்சுமளவிற்கு அவருக்குச் செல்வாக்கை உருவாக்கிக் கொடுத்தார்கள்! அதனால், தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்தையும் சுற்றிச் சுற்றி வந்து, ஆங்காங்குள்ள நிலைகளுக்கேற்ப ஏழைமக்களை வாழவைக்கவே அவர் அரும்பாடு பட்டார்: தேர்தல் காலத்தில் பொதுமக்கள் தரத்தையும், மனப் போக்கையும் அறிந்து, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அந்தந்தத் தொகுதியிலே நிற்க வைத்தார். அந்தத் தொகுதிகள் பெரும்பாலும் தவறாமல் வெற்றி பெற்றுக்களிப்பிலே நீந்தின! தலைவர் காமராஜ் அவர்கள், ஆணவமாகப்பேசி யாரிடமும் வீண் சர்ச்சையை உருவாக்க மாட்டார் யார் எதைக் கூறினாலும் 'ஆகட்டும் பார்க்கலாம்' என்ற பதிலைக்கூறி அமைதிப்படுத்துவார் 1951ஆம் ஆண்டு இறுதியில், பிரஜாசோஷலிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கிளர்ச்சி செய்தார்கள் அதனால், தமிழ்நாட்டுக் காங்கிரஸ்கட்சியின்தலைவர்களிடையே குழப்பமும் அதிருப்தியும் எழுந்து பரவின இந்த நேரத்தில், தமிழ்நாட்டு விவசாயிகளிடமும்மனக்குறைகள் குமுறி எழுந்தன உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்வதும், அவற்றை நகர்ப்புற மக்களுக்கும் - இராணுவத் தினருக்கும் வழங்குவதும், தமிழ் நாட்டு மக்களுக்குப் பெரிய தலைவலிப் பிரச்னையாக இருந்தன. இரண்டாம் உலகப் போர்முடிவுற்ற காலத்திலிருந்தே உணவுப் பங்கீட்டுக் கடைகளில் பெருத்தகுழப்பமும், சரிவர உணவுப் பொருட்கள் வழங்க இயலா நிலையும் அப்போது மாநில அரசுகளுக்கு ஏற்பட்டன! கொள்முறையில் ஊழல் - ஊடுருவல்! ஒவ்வொரு விவசாயியும் அவரவர் குடும்பத் தேவைக்குப் போதுமானதை எடுத்துக் கொண்டு உபரியாக இருக்கும் உணவு